புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நட...!

கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு என்ற முதுமொழி, நாம் கற்ற கல்வி, பட்டறிவு, பக்தி, நன்நடத்தை, அன்பு, பொதுநலம் நாடுதல் ஆகியவற்றைக் கொடுக்கும். இத்தகைய கல்வி எல்லாருக்கும் நன்மை பயக்கும்.

News image
Updated On :1 மே 2020, 1:41 pm

முனைவர் தே. பால் பிரேம்குமார்

கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு என்ற முதுமொழி, நாம் கற்ற கல்வி, பட்டறிவு, பக்தி, நன்நடத்தை, அன்பு, பொதுநலம் நாடுதல் ஆகியவற்றைக் கொடுக்கும். இத்தகைய கல்வி எல்லாருக்கும் நன்மை பயக்கும்.
ஆண்டவராகிய இயேசு தம் சீடர்களுக்கு சற்குருவாக, தெய்வமாக உலக ரட்சகராக காண்பித்தார். அவரின் சீடர்கள் தம் சத்குருவை, ஆசானாக மட்டும் அறியவில்லை, மாறாக, அவர் தேவகுமாரன் வானத்திலிருந்து வந்த மனிதகுமாரன். தம் பணி மனிதரை திரும்பவும் கடவுளின் பிள்ளைகளாக மாற்றவே இவ்வுலகம் வந்தார். தம் பணி நிறைவு கொண்டபின்பு தம் சீடர்கள், உலகமெங்கும் ரட்சிப்பைபோதிக்க வேண்டும் எனப் பணித்தார்.
தம் குருவும் தெய்வமாகி இயேசு எப்படி வல்லமையுள்ளவரும், நல்லவரும் மன்னிப்பவரும் அன்புள்ளவரும், அற்புதம் செய்பவராக இருந்ததுபோல் சீடர்கள் தம் குருவைப்போல் தெய்வ பக்தியை கற்றுக்கொண்டனர். இயேசு சிலுவையில் மரித்து உயிர்த்தபின்பு தம் சீடர்களைக் கண்டு ஊக்குவித்து தெய்வப்பணி செய்ய வல்லமை தந்தார்.
சீடர்கள் தங்கள் பயத்தை விட்டு தெய்வப் பணியை தொடர்ந்தனர். சீடர்கள் தம் குருவைப் போல் அற்புதங்களும் அதிசயங்களையும் தெய்வ செய்தியையும் கூறி மிக வல்லமையாக பணி செய்தனர்.
இயேசு உயிர்த்தெழுந்து நாற்பது நாள்கள் திருக்காட்சி தந்தார். நாற்பது நாள்களுக்குப் பின்பு சீடர்கள் காண வானலோகம் சென்றார். சீடர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்று தெய்வப் பணியை செய்தனர். மாலை மூன்று மணியளவில் பேதுருவும் யோவானானும் தெய்வ ஆலயத்துக்குச் சென்றனர். அப்போது, பிறவியிலேயே முடவனாயிருந்த ஒருவனைத் தூக்கிக் கொண்டு வந்தனர். கோயிலுக்குள் போகிறவர்களிடம் பிச்சை வாங்குவதற்காக நாள்தோறும் அவனைக் கோயிலின் அழகு வாயில் என்னும் வாசலருகில் வைப்பார்கள்.
பேதுருவும் யோவானும் கோயிலுக்குள் நுழைகையில் அவர்களைப் பார்த்துப் பிச்சை கேட்டான். பேதுருவும் யோவானும் அவனை உற்று நோக்கினர். பேதுரு, இங்கே பார் என்றார். அவனோ ஏதேனும் கிடைக்கும் என்று அவர்களை ஆவலோடு நோக்கினான். பேதுரு அவனிடம், வெள்ளியோ பொன்னோ என்னிடம் இல்லை, என்னிடம் உள்ளதை உனக்கு கொடுக்கின்றேன்.
நாசரேயனாகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நட, என்று சொல்லி அவனது வலக்கையைப் பிடித்துத் தூக்கிவிட்டார். உடனே, அவனுடைய பாதங்களும் கணுக்கால்களும் வலுவடைந்தன. அவன் துள்ளி எழுந்து நடக்கத் தொடங்கினான். துள்ளி நடந்து கடவுளைப் புகழ்ந்துகொண்டே அவர்களுடன் கோயிலுக்குள் சென்றான். அவன் நடப்பதையும் கடவுளைப் புகழ்வதையும் மக்கள் எல்லோரும் கண்டனர். (அப்போஸ்தலர் பணி 3 1-10)
கோயில் வாசலில் பிச்சை கேட்டுக் கொண்டிருந்த பிறவி முடவன் அவன் தான் என அறிந்தனர். மக்கள் திகைப்புற்று மலைத்து போயினர். மக்கள் இந்த அற்புத நிகழ்ச்சியால் இறைவனிடம் மிக பக்திக் கொண்டனர்.
பேதுருவும் யோவானும் இயேசுவின் பிரதான சீடர்கள். தம் தெய்வ குருவிடம் கற்றுக் கொண்ட தெய்வ பக்தியையும் ஏழை பிறவி முடவன்மேல் மனமிரங்கும் தெய்வ குணத்தையும் தியாகம், தம் குரு பணித்த ஊழியத்தை உலகமெல்லாம் செய்தனர். இவ்வுலகம் இயேசுவை அறிந்தது. இயேசு உலக ரட்சகர் என்பதையும் அவர் மொழிகள் மக்களுக்கு நன்மை செய்தது.
நம் தெய்வமும் சற்குருவாகியவரின் அன்பு, தியாகம், தாழ்மை, விட்டுக்கொடுக்கும் தன்மை, ஏழைகளுக்கு இரங்குதல், இயேசுவின் போதனைகளை பின்பற்றுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.