மதுரையில் உள்ள பஞ்சபூதத் தலங்கள்! 

மதுரையிலேயே பஞ்சபூதத் தலங்கள் உள்ளதை நம்மில் பலபேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவை:
மதுரையில் உள்ள பஞ்சபூதத் தலங்கள்! 


மதுரையிலேயே பஞ்சபூதத் தலங்கள் உள்ளதை நம்மில் பலபேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவை:

மதுரை செல்லூரில் உள்ள திருவாப்புடையார் கோயில் - நீர் ஸ்தலம்

சிம்மக்கல் பழைய சொக்கநாதர் கோயில் - ஆகாய ஸ்தலம்

இம்மையில் நன்மை தருவார் கோயில் - பூமி ஸ்தலம்

தெற்கு மாசி வீதி தென் திருவாலவாயர் கோயில் - அக்னி ஸ்தலம்

தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் - வாயு ஸ்தலம் 

ஆகியவை மதுரையின் பஞ்சபூதத் தலங்கள்!


அதனால்தான் பஞ்சபூதங்களை உள்ளடக்கி வெள்ளை, ஊதா, பச்சை, சிவப்பு, மஞ்சள் நிறங்கள் கலந்த பஞ்சவர்ணக் கிளியை அன்னை மீனாட்சி கையில் அமர்த்தியுள்ளாள்.

அப்பன் சிவனும் 64 திருவிளையாடல்களையும் கடம்பவனமாம் மதுரையிலேயே நிகழ்த்தி உள்ளார்.

திருவாரூரில் பிறந்தால் புண்ணியம்
காஞ்சியில் வாழ்ந்தால் புண்ணியம்
காசியில் இறந்தால் புண்ணியம்
சிதம்பரத்தில் வழிபட்டால் புண்ணியம்
திருவண்ணாமலையை நினைத்தாலே புண்ணியம்.

மதுரையில் பிறந்தாலும் 
மதுரையில் வாழ்ந்தாலும் 
மதுரையில் இறந்தாலும் 
மதுரையில் வழிபட்டாலும் 
மதுரையை நினைத்தாலும் புண்ணியம்..!

சீறா நாகம், கறவா பசு, பிளிறா யானை, முட்டா காளை, ஓடா மான், வாடா மலை, காயா பாறை, பாடா குயில் இவை அனைத்தும் மதுரை நகரின் எட்டு திசைகளைக் குறிக்கும் அந்தக்காலத்து எல்லை ஊர்கள்.

சீறா நாகம்     -     நாகமலை
கறவா பசு     -     பசுமலை
பிளிறா யானை     -     யானைமலை
முட்டா காளை     -     திருப்பாலை
ஓடா மான்     -     சிலைமான்
வாடா மலை     -     அழகர்மலை
காயா பாறை     -    வாடிப்பட்டி
பாடா குயில்     -     குயில்குடி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com