கடனின் முக்கியத்துவம்
கடன் வாங்க மனிதனுக்கு அல்லாஹுத ஆலா அனுமதித்திருப்பது அவனின் பேரருளாகும்.


ஹாஜி மு.முகம்மது அன்வர்தீன்
கடன் வாங்க மனிதனுக்கு அல்லாஹுத ஆலா அனுமதித்திருப்பது அவனின் பேரருளாகும். ஆனால், கடன் வாங்கியவர் அதற்குரிய நிபந்தனைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும். இல்லையானால் கடன் சுவர்க்கம் செல்வதை விட்டுத் தடுக்கும் பெருந்தடையாகும். அவசியத் தேவைக்கு மட்டுமே கடன் வாங்கவேண்டும். ஆடம்பர செலவினங்களுக்கு கடன் வாங்குவது கூடாது. கடன் வாங்கும்போது அதனைத் திருப்பித்தர வேண்டும் என்ற எண்ணம் உறுதியாக இருக்க வேண்டும்.
கடன் வாங்குவதற்கு ஒருவரிடம் அலைந்துவிட்டுப் பிறகு அக்கடன் கொடுத்தவரை அலையவிடக் கூடாது. கடன் வாங்குவதை எழுதிக் கொள்ள வேண்டும். கடன் கொடுத்தவர் கேட்டால் திருப்பிக் கொடுக்கலாம். இல்லையானால் அபபடியே விட்டுவிடலாம் என்ற எண்ணம் ஏற்பட்டால், சுவர்க்கம் செல்லமுடியாது என்பதை நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும். எவ்வளவு உயர்வான அமல்களை ஒருவர் செய்திருந்தாலும், மறுமையில் கடன் ஒரு தடையாகிவிடும்.
கியாமத் நாளில் எந்த மனிதரிடம் பணமோ, சொத்தோ இருக்காது. கடன் கொடுத்தவர் அல்லாஹ்விடம் மறுமையில் முறையிட்டால், அக்கடனை அடைக்கும்படி கடன்பட்டவருக்கு அல்லாஹ் கூறுவான். அன்றைய நாளில் பணம் இல்லாததால் கடன் பட்டவரின் நன்மைகள் கடன் கொடுத்தவருக்கு போய்ச்சேரும்.
கடன் என்பது பணம் என்று மட்டும் நினைக்கிறோம். ஒருவருக்கு அளிக்கும் வாக்குறுதி, ஒருவரின் அமானிதம் ஆகியவையும் கடன்தான். பணத்தால் ஏற்பட்ட கடன், வாக்குறுதியால் ஏற்பட்ட கடன், அமானிதத்தால் ஏற்படும் கடன் ஆகியவை சுப்ரிலும், மஹ்ஷரிலும் அவரின் முன்னால் வந்து தன்மை நிறைவேற்றும்படி கூறும். அதனை அவர் நிறைவேற்றும்வரை சுவனம் புகமாட்டார்.
நபி (ஸல்) அவர்கள் கடன்பட்டவரின் ஜனாஸôவையும், முனாபிக்கீன்களின் ஜனாஸôவையும் தொழவைக்கமாட்டார்கள் என்பதிலிருந்தே கடனின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.
நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் : இறைவழியில் உயிரைத் தியாகம் செய்தவரின் ஒவ்வொரு பாவமும் மன்னிக்கப்படும். கடனைத்தவிர - முஸ்லிம்
ஒளு இல்லாமல் குர்ஆன் ஷரீபை தொடுவது கூடாது.
ஒவ்வொரு மனிதரும் தங்களின் அவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள பிறரிடம் கடன் வாங்குவது என்பது பழக்கத்தில் உள்ளதாகும். கஷ்டவாளிகளுக்கு கடன் கொடுப்பதும்கூட தர்மமே என மார்க்கம் கூறுகிறது.
நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் :
கடன் கொடுத்து (ஒருவருக்கு) உதவி செய்வது தர்மத்தைச் சாரும்.
மேலும், நியாயமான தேவைகளுக்காக கடன் கேட்டால் அவருக்கு கொடுங்கள். அது தர்மத்தைவிட அதிக நன்மையைப் பெற்றுத்தரும். தர்மம் செய்வதில் பத்து நன்மைகள்தான் கிடைக்கும். ஆனால் கடன் கொடுப்பதால் பதினெட்டு நன்மைகள் கிடைக்கின்றன.
அவசியத் தேவையின்றி ஆடம்பரத்திற்கோ, வீண் விரயம் செய்வதற்கோ கடன் வாங்குபவர் நிச்சயமாக அதனை மீண்டும் செலுத்த மிகவும் சிரமம் அடைவார். காரணம் இறைவன் விரும்பாத ஆடம்பரத்தை மனிதன் விரும்பினால் அவன் இறைவனின் பொறுப்பிலிருந்து நீங்கிவிடுவான்..!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...