ஜோதிடத்தில் எட்டாம் வீட்டின் சிறப்புகள்

எட்டாம் வீடு பெண்களுக்கு மாங்கல்ய ஸ்தானமுமாகும் ஆகியவற்றைக் குறிக்கும். 
weekly predictions
weekly predictions
Updated on
1 min read

எட்டாம் வீட்டைப் பற்றி ஜோதிடத்தில் கீழ்க்கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளது: கண்டம், விபத்து, ஆயுள், வழக்குகளில் வெற்றி அல்லது தோல்வி, சுகவீனம், கவலை, நெடுநாளாக வியாதியால் அவதிப்படுதல், எட்டாம் வீடு பெண்களுக்கு மாங்கல்ய ஸ்தானமுமாகும் ஆகியவற்றைக் குறிக்கும். 

இந்த எட்டாமதிபதி மேற்கண்டவாறு பல வகையிலும் இப் புத்தாண்டில் சுப பலம் பெற்றிருப்பதால் பலகீனங்கள் குறைந்து நன்மைகள் கூடிவிடும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். 

சூரிய பகவான் வலுத்திருப்பதால் மருத்துவர்கள் மேன்மையடைவார்கள். மருந்துகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் வளர்ச்சி அடையும். 

வெளியுறவுத்துறை சாதனைகள் செய்யும்.  மரம் ஏற்றுமதி - இறக்குமதி மூலமாகவும், காடுகள், வன ஒப்பந்தங்களாலும் நமது நாட்டின் வளம் கூடும். அரியவகை மூலிகைகள் கண்டறியப்பட்டு அவற்றிற்கான அறிவுசார் சொத்து உரிமைகளும் கிடைக்கும்.

பாவாத் பாவம்:அஷ்டம ஸ்தானம் என்பது தன ஸ்தானத்திற்கு ஏழாம் வீடாகவும், சுக ஸ்தானத்திற்கு ஐந்தாம் வீடாகவும், நட்பு ஸ்தானத்திற்கு இரண்டாம் வீடாகவும், தொழில் ஸ்தானத்திற்கு லாப ஸ்தானமாகவும், லாப ஸ்தானத்திற்கு தொழில் ஸ்தானமாகவும் "பாவாத் பாவம்' என்கிற ஜோதிட அடிப்படையில் அமைகிறது என்றும் பார்க்கும் பொழுது, மறைவு ஸ்தானம் என்கிற குறை பெருமளவுக்கு அடிபட்டுப் போகிறது என்றும் புரிந்து கொள்ள வேண்டும்.

தசா சந்தி: தசா சாந்தி உண்டாகிறதா என்று எப்படி பார்ப்பது?: திருமணப் பொருத்தம் பார்க்கும் பொழுது தசா சந்தி உண்டாகிறதா என்று பார்க்க வேண்டும். முதலில் தசா சந்தி என்றால் என்னவென்று சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக வரனுக்கோ அல்லது வதுவுக்கோ ஒரு தசை முடிந்து மற்றொரு தசை ஆரம்பமாகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். வரனுக்கு 35-ஆம் வயதில் ஒரு தசை முடிந்து மற்றொரு தசை ஆரம்பமாகிறது. அதாவது சனி மஹா தசை முடிந்து புதன் மஹா தசை நடக்கத் தொடங்கியுள்ளது என்று கொள்வோம். 

அந்தத் தசை ஆரம்பமான ஓர் ஆண்டுக்குள் வதுவுக்கும் (அவரது வயதுக்கு ஏற்ப) ஏதோ ஒரு தசை முடிந்து மற்றொரு தசை ஆரம்பமானால், எடுத்துக்காட்டாக சூரிய தசை முடிந்து சந்திர தசை நடக்க இருக்கிறது என்று அமைந்தால் அதை தசா சந்தி என்று கூறுவர்.

அதாவது, ஒரு தசை முடிவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்போ அல்லது ஆரம்பித்து ஓராண்டுக்குள்ளாகவோ வரன் ஆகிய மற்றொருவருக்கு வேறொரு தசை நடக்கத் தொடங்கும் காலத்தை தசா சந்தி காலம் என்று கூறுவதுண்டு. இந்த தசா சந்தி காலத்தில் அப்படி தசை மாறும் கிரகங்களுக்கு வழிபாடு செய்தாலே போதுமானது. சிலர் நவகிரக ஹோமம் செய்து அந்த கிரகங்களுக்கு பிரீதி செய்கிறார்கள். இதுவும் சரியானதே. அதனால் இத்தகைய ஜாதகங்களை நிராகரிக்கக் கூடாது என்பதே எங்களின் கருத்தாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com