இந்த ராசிக்காரருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டு: வாரப்பலன்

ஆகஸ்ட் 6 முதல் 12ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்துக்கு ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர் கணித்துக் கொடுத்திருக்கும் வாரப்பலன்கள். 
இந்த ராசிக்காரருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டு: வாரப்பலன்
இந்த ராசிக்காரருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டு: வாரப்பலன்
Published on
Updated on
5 min read

ஆகஸ்ட் 6 முதல் 12ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்துக்கு ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர் கணித்துக் கொடுத்திருக்கும் வாரப்பலன்கள்.

மேஷம்
(அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

ஆன்மிக, அறப் பணிகளில் ஈடுபாடு கூடும். பண நடமாட்டம் சுமாராக இருக்கும். எதிரிகள் அடங்குவார்கள். வழக்குகளில் திருப்பம் உண்டாகும். உடல்நிலை அசதி, கால்வலி, கழுத்து வலி போன்றவைகள் உண்டாகும். 
உத்தியோகஸ்தர்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். மேலதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்களில் வெற்றி கிட்டும். வியாபாரிகளுக்கு ஆரஞ்சு, செந்நிறப் பொருள்கள் லாபம் தரும். அலங்காரப் பொருள்கள், வாசனை திரவியங்களால் ஆதாயம் கிடைக்கும். விவசாயிகளுக்கு செயலில் வேகம் பிறக்கும். புதிய நில புலன்களை குத்தகைக்கு வாங்குவீர்கள். பணம் பல வழிகளில் வந்து சேரும். 

அரசியல்வாதிகள் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். உங்கள் செயலில் ஈடுபாடும், ஆக்கமும் உண்டாகும். கலைத்துறையினருக்கு வாழ்க்கை வசதிகள் பெருகும். உங்கள் செல்வாக்கும், மதிப்பும் உயரும். பெண்மணிகளுக்கு  உடல் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்பு ஏற்படும். தாய், தந்தை நலனில் கவனம் செலுத்த வேண்டி வரும். பயணங்களைப் பாதுகாப்புடன் செய்வீர்கள். மாணவமணிகள் படிப்பில் அதிகம் கவனம் செலுத்துங்கள். வெளிநாடு சென்று படிக்கும் யோகமும் உண்டாகும். 
பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 06, 07. சந்திராஷ்டமம்: இல்லை.

ரிஷபம்
(கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

நீண்ட நாளைய கனவுகள் சாத்தியமாகும். பெரியவர்களும், மேலதிகாரிகளும் உங்களுக்குப் பக்க பலமாக உதவுவார்கள். பதவி உயர்வு, இட மாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை சாதகமாகும். புனிதப் பணிகளில் ஈடுபடுத்திக்  கொள்வீர்கள். 

உத்தியோகஸ்தர்களின் புதிய முயற்சிகள் பலிதமாகும். சற்று பொறுமையுடன் நிதானத்துடன் இருக்கவும். வியாபாரிகளுக்கு கணிதம், ஓவியம், தரகு, சிற்பம் போன்றவை சுபிட்சம் காணும். கூட்டுத் தொழில் கை கூடும். விவசாயிகள் விவசாயத்தில் அதிக கவனம் தேவை. கடுமையாக உழைக்க வேண்டி வரும். பண வரவு ஓரளவு சீராகும். 

அரசியல்வாதிகள் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கை கூடும். தங்கள் நிலை உயரப்பெறுவீர்கள். பிரச்னைகள் விலகும். கலைத்துறையினர் வெற்றிப்படிகளில் ஏறுவார்கள். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளுக்கும் இடமுண்டு. பெண்மணிகள் குழந்தை இல்லாதோருக்கு மகப்பேறு பாக்கியம் கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். சுப காரிய நிகழ்ச்சிகள் கை கூடி வரும். மாணவமணிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு புகழ் பெறுவீர்கள். பெற்றோர், ஆசிரியர்களின் கருத்துகளையும் கேட்டு மதித்து நடப்பீர்கள். 
பரிகாரம்: ஸ்ரீகிருஷ்ணரை வழிபட்டு வரவும். அனு
கூலமான தினங்கள்: 06, 08. சந்திராஷ்டமம்: இல்லை.

•••
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)


நல்ல வகையில் செய்யக் கூடிய விஷயங்களைச் செய்வீர்கள். புதுமையான சிந்தனை உங்களிடையே உருவாகும். பொறுமையாக நிலைமையைக் கையாள்வதுதான் சாலச் சிறந்தது. பயணத்தைத் தவிர்க்கவும்.  
உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் சக ஊழியர்கள் உங்கள் பேச்சைக் கேட்பார்கள். நேரத்தை வீணாக்காமல் மேலதிகாரிகளிடம் நற்பெயர் எடுப்பீர்கள். வியாபாரிகளுக்கு செழிப்பான பாதை புலப்படும். தன வந்தர்கள் சகாயம் கிடைக்கும். விவசாயிகளுக்கு வழக்குகளில் அனுகூலமான தீர்ப்பை எதிர்பார்க்கலாம். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடி வரும்.  

அரசியல்வாதிகள் பிறரிடம் கோபம் கொள்ளாமல் நிதானமாக பேசிப் பழகுவது நல்லது. கலைத்துறையினர் வருமானம் சற்று உயரும். பழைய ஒப்பந்தங்களை குறிப்பிட்ட தேதிக்கு முன்னரே முடித்துக் கொடுப்பீர்கள். பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையின்றி ஒருவருக்கொருவர், ஏட்டிக்குப் போட்டியாகவே நடந்து கொள்வர். குழப்பம் அதிகரிக்கும். செலவும் கட்டுக்குள் அடங்காமல் இருக்கும். மாணவமணிகள் உயர் கல்வி கற்பதற்காக எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். காரியத்தில் கண்ணாக இருங்கள்.  
பரிகாரம்: சிவபெருமானை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 07, 09. சந்திராஷ்டமம்: இல்லை.

•••
கடகம்
(புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

திட்டமிட்டு  செயல்படுவீர்கள். பூர்வீகச் சொத்துகளில் சில வில்லங்கம் உருவாகும். மனக் குழப்பம் அதிகரிக்கும். உழைப்புக்கும், தியானத்துக்கும் முன்னுரிமை அளியுங்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். 
உத்தியோகஸ்தர்கள் அனைத்து வேலைகளையும் திட்டமிடுதல் நன்மை பயக்கும். மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்காது. சக ஊழியர்கள் உதவுவார்கள். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக முடியும். உழைப்புக்கேற்ற பலனை அடைவீர்கள். விவசாயிகள் குத்தகை எடுப்பதில் சிரமம் இருந்தாலும் பலன் உங்களுக்குச் சாதகமாகவே இருக்கும். மகசூல் பெருகி நல்ல லாபத்தைக் காண்பீர்கள். 

அரசியல்வாதிகள் எதிரிகளையும் நண்பனாக்கிக் கொள்வீர்கள். மேலிடத்திடம் நற்பெயரைச் சம்பாதித்துக் கொள்வீர்கள். கலைத்துறையினருக்கு சக கலைஞர்களின் ஒத்துழைப்புடன் முன்னேற்றம் உண்டாகும். எதிரிகளைச் சற்று ஓரம் தள்ளி வையுங்கள். பெண்மணிகள் கைப்பொருளை இழக்க நேரிடும். ஜாக்கிரதையாக இருக்கவும். குழந்தைகளினால் இல்லத்தில் கூடுதல் மகிழ்ச்சி ஏற்படும். மாணவமணிகளுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். சக மாணாக்கர்களுக்கும் உதவி செய்து ஆசிரியரின் பாராட்டைப் பெறுவீர்கள். 
பரிகாரம்: குரு பகவானை வழிபட்டு வரவும். அனு
கூலமான தினங்கள்: 08, 10. சந்திராஷ்டமம்: இல்லை.

•••
சிம்மம்

(மகம், பூரம்,உத்திரம்  முதல் பாதம் முடிய)

குடும்பத்தில் அமைதி நிலவும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சகோதர, சகோதரிகள் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வார்கள். மனதிற்கினிய பயணங்களைப் பாதுகாப்புடன் மேற்கொள்ளுங்கள்.  
உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளைத் திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்கள். முக்கிய வேலைகளைத் தள்ளிப் போடாதீர்கள். வியாபாரிகள் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சிறு ஆதாயங்களைப் பெற கடின முயற்சிகளைச் செய்ய வேண்டி வரும். விவசாயிகளுக்கு தன்னம்பிக்கை வளரும். சிறு பயணங்களால் நன்மை அதிகரிக்கும். கால்நடைகளினால் நிறைய லாபம் பெறுவீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு உயர்ந்தவர்களின் நட்பு கிடைத்து ஆதரவு கூடும். கலைத்துறையினர் சக கலைஞர்களிடம் நல்ல விதமாக பழகி காரியங்களைச் சாதித்து கொள்வீர்கள். பயணங்களை ரத்து செய்து விடுங்கள். பெண்மணிகள் வீண் பேச்சு மற்றும் வாய்ச் சண்டையில் ஈடுபடாதீர்கள். சுப காரியங்கள் நடத்தவும் சற்று சிரமப்படுவீர்கள். மாணவமணிகள் மன அழுத்தம் குறைவதற்கு யோகா, பிராணாயாமம் போன்றவற்றைச் செய்யுங்கள். நண்பர்களுடன் அறிவு சார்ந்த விஷயங்களை அலசுங்கள்.
பரிகாரம்: சனி பகவானை வழிபட்டு வரவும். அனு
கூலமான தினங்கள்: 09, 10. சந்திராஷ்டமம்: இல்லை.
•••
கன்னி
(உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

இல்லத்தில் மகிழ்ச்சிக்கரமான சம்பவங்கள் நடக்கும். நற்காரியங்களில் ஈடுபடுவீர்கள். வருமானம் சிறப்பாக இருக்கும். சகோதர, சகோதரிகள் உங்களுக்கு உதவுவார்கள். நன்மை தரும் பயணங்களைப் மேற்கொள்வீர்கள். 
உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்கள், நண்பர்களின் தொல்லைகளால் எரிச்சல் உண்டாகும். ஊக்கத்துடனும், சுறுசுறுப்புடனும் பணியில் ஈடுபடுங்கள். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். ஸ்பெகுலேஷன் போன்ற துறைகளில் ஈடுபட வேண்டாம். இழப்புகள் ஏற்படும். விவசாயிகள் நீர்ப்பாசன வசதிகளில் கவனம் செலுத்துவீர்கள். புதிய நிலங்களை வாங்கும் முயற்சியில் சற்று இழுபறி நிலவும். 

அரசியல்வாதிகளுக்கு நம்பிக்கை குறையும். பழைய தவறுகள் திரும்ப நடைபெறாமல் தவிர்த்து விடவும். கலைத்துறையினர் முதிர்ச்சியுடன் நடந்து கொள்ளவும். நண்பர்களுடன் சுற்றுலா சென்று வருவீர்கள். பெண்மணிகளுக்கு தொலை தூரத்திலிருந்து அசுபச் செய்தி வரும். உடல் நலம் கனிக்கப்பட வேண்டி வரும். மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். மாணவமணிகள் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். உங்களின் முன்னேற்றத்திற்காக பெற்றோர்களும் தோள் கொடுப்பார்கள். 
பரிகாரம்: ஸ்ரீபெருமாளை வழிபட்டு வரவும். அனு
கூலமான தினங்கள்: 10, 11. சந்திராஷ்டமம்: இல்லை.

•••
துலாம்
(சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

உடல் ஆரோக்கியம் சீர்படும். குடும்பத்தாருடன் மகிழ்ச்சியான சூழலில் இருப்பீர்கள். புதிய வீடு கட்டுவதோ, புதுவீடு குடியேறுவதோ நிகழும். புதிய முயற்சிகளை நன்கு ஆலோசித்து செயல்படுத்தவும். 

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைத்து புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். விரும்பிய இட மாற்றம் நிகழும். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் நன்றாக இருக்கும். கூட்டாளிகள் உங்களின் ஆலோசனையைக் கேட்டு நடப்பார்கள். விவசாயிகள் விளை பொருள்களின் விற்பனையில் நல்ல லாபம் கிடைக்கும். கால்நடைகளுக்கான செலவு அதிகரிக்கும். 

அரசியல்வாதிகள் கட்சியில் மதிப்பைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். ஏமாற்றங்களைத் தவிர்க்க எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் தேடிவரும். தடைகள் விலகி புதிய வழிகள் புலப்படும். பெண்மணிகள் உங்களிடமிருந்து விலகி இருந்த உறவினர்கள் மீண்டும் சேருவார்கள். கடன்களைத் திருப்பி அடைத்து விடுவீர்கள். மாணவமணிகளுக்கு எவரிடத்திலும் எதிர்ப்பு வேண்டாம். விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். படிப்பில் ஆர்வம் காட்டவும்.
பரிகாரம்: ஸ்ரீஅம்பாளை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 06, 10. சந்திராஷ்டமம்: இல்லை.
•••
விருச்சிகம்
(விசாகம் 4-ம் பாதம் முதல்  அனுஷம், கேட்டை முடிய)

ஆன்மிக பணிகளில் ஈடுபடுவீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். வாக்குறுதியை எக்காரணம் கொண்டும் மீற மாட்டீர்கள். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வேலை செய்பவர்களை உங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும். சக ஊழியர்களிடம் தோழமையுடன் இருப்பீர்கள். வியாபாரிகளுக்கு வரவு செலவு விஷயங்களில் அலட்சியம் கூடாது. வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். விவசாயிகள் புதிய குத்தகைகளை நாடிச் செல்ல வேண்டாம். மகசூல் திருப்திகரமாக இருக்கும். 

அரசியல்வாதிகள் எதிர்க்கட்சிகளின் தொல்லைகளைச் சந்திக்க நேரிடலாம். சில முயற்சிகளில் வெற்றி பெறுவது கடினம். கலைத்துறையினர் ரசிகர்களின் ஆதரவுடன் திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். சக கலைஞர்கள் தோழமை பாராட்டுவார்கள். பெண்மணிகள் பொறுப்புக்களை உணர்ந்து செயல்படுவீர்கள். குடும்பத்தில் அமைதியைக் காண்பீர்கள். மாணவமணிகளுக்கு உங்கள் முயற்சிகள் விரும்பிய இலக்குகளை அடைய சற்று தாமதமாகும். குழப்பங்களைத் தவிர்த்து செயல்களில் முனைப்புடன் ஈடுபடுங்கள்.
பரிகாரம்: சிவபெருமானையும், பார்வதி தேவியையும் வழிபடவும். அனுகூலமான தினங்கள்: 07, 12. 
சந்திராஷ்டமம்: 06.
•••
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம்  முதல் பாதம் முடிய)

பணவரவு சீராக இருப்பதால் எதிர்காலத்திற்குத் தேவையான முதலீடுகளைச் செய்வீர்கள். உங்கள் முயற்சியால் குடும்பத்தில் உள்ள சிக்கல்களைக் களைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். 
உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் முன்னேற்றம் கூடும். சக ஊழியர்களிடம் அக்கறை காட்டுவீர்கள். வியாபாரிகளுக்கு பொருளாதார நெருக்கடி குறையும். நண்பர்கள் உதவுவார்கள். விவசாயிகள் அதிக போட்டிகளைச் சந்தித்தாலும் தானிய விற்பனையில் எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவீர்கள். 

அரசியல்வாதிகள் சுறுசுறுப்புடன் காரியங்களைச் செய்வீர்கள். கட்சியில் மதிப்பு மரியாதை உயரும். கலைத்துறையினருக்கு உங்கள் திறமைகளை உலகிற்கு வெளிக்காட்டக் கூடிய வாய்ப்புகள் வரும். ஒப்பந்தங்கள் லாபகரமாகவே இருக்கும். பெண்மணிகள் சிலருக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடு உண்டாகும். அதிர்ஷ்ட தேவதை கதவைத் தட்டும் நேரமிது. மாணவமணிகள் நேரத்துக்கு தகுந்தவாறு உங்கள் செயல்களை மாற்றிக் கொள்வது அவசியம். பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் மதித்து நடக்கவும்.

பரிகாரம்: ஸ்ரீஆஞ்சநேயரை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 09, 12. சந்திராஷ்டமம்: 07, 08.
•••

மகரம்
(உத்திராடம் 2-ம் பாதம் முதல்  திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

பண விரயங்கள் எதுவும் ஏற்படாது. முயற்சிகள் பலிதமாகும். பிரிந்திருந்த குடும்பத்தினர் ஒன்றுசேர்வார்கள். கடன் தொல்லைகள் விலகிவிடும். வெளிநாடு செல்லும் யோகம் வந்துவிட்டது. வண்டி, வாகனங்களால் நன்மை உண்டு. 

உத்தியோகஸ்தர்கள் கடின வேலைகளையும் மன அழுத்தம் இல்லாமல் செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்கள் உதவுவார்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கலில் லாபம் கிடைக்கும். விவசாயிகள் தேவைக்கேற்ப கூலி ஆட்களைத் தேர்ந்தெடுத்தால் நன்மை உண்டு. பணவரவு அதிகரிக்கும். 
அரசியல்வாதிகளுக்கு உங்கள் செயல்கள் சரியான பாதையில் செல்லும். பெருமைப்படும்படியான முயற்சியில் இறங்குவீர்கள். கலைத்துறையினர் சிறப்பான படைப்புகளை உருவாக்குவார்கள். சிறந்த அங்கீகாரம் பெறுவார்கள். பெண்மணிகள் மற்றவர்கள் முன் சொந்தக்காலில் நிற்க பழகிக் கொள்வீர்கள். உங்கள் செயல்களில் வியக்கத்தக்க முன்னேற்றம் காண்பீர்கள். மாணவமணிகள் மனதில் உற்சாகத்துடன் பாடங்களைப் படிப்பீர்கள். யோகா, தியானம் போன்றவற்றில் ஈடுபடுங்கள்.
பரிகாரம்: ஸ்ரீஐயப்ப சுவாமியை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 08, 12. சந்திராஷ்டமம்: 09, 10, 11.
•••
கும்பம்
(அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

உங்கள் பேச்சுத் திறமையால் பிறரைக் கவர்வீர்கள். உங்கள் செயல் திட்டங்களை மாற்றிக் கொள்வீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிறையும். உற்றார் உறவினர்களும், நண்பர்களும் உங்கள் பேச்சைக் கேட்டு நடந்து கொள்வார்கள். 
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கெடுபிடிகளுக்கு ஆளாவீர்கள். பிறரை நம்பி ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள். வியாபாரிகள் நன்கு ஆலோசித்து அதன் பிறகே கூடுதல் முதலீடுகளைச் செய்யவும். கூட்டாளிகளைத் தவிர்த்து விடுங்கள். விவசாயிகள் சிலருக்கு வழக்குகளால் மன உளைச்சல் ஏற்படும். கடுமையாக உழைத்தால் அதற்கேற்ப பலன் கிடைக்கும். 
அரசியல்வாதிகள் கிடப்பில் இருந்த திட்டங்களை செயல்படுத்தி முன்னேறுவீர்கள். கட்சியில் முன்னிலைப்படுத்திக் கொள்வீர்கள். கலைத்துறையினர் காலத்தை நிர்ணயம் செய்து உழைப்பது சிறப்பு. உங்களைப் புரிந்து நடக்கும் நண்பர்களைக் கூட்டாளிகளாக சேர்த்துக் கொள்ளவும். பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமை நிலவ முயற்சி எடுப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவமணிகள் கல்வியில் ஆர்வம் குறைவதால் கடினமாக உழையுங்கள். யோகா, தியானம் முதலியவற்றை மேற்கொள்ளவும்.
பரிகாரம்: துர்க்கை அம்மனை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 10, 11. சந்திராஷ்டமம்: 12.
•••
மீனம்
(பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

குடும்பத்தில் நிம்மதி நிறையும். குழந்தைகளின் செயல்களால் சந்தோஷத்தை அனுபவிப்பீர்கள். உங்கள் பழைய செயல் திட்டங்களை மாற்றிக் கொள்வீர்கள். பலவழிகளிலும் வருமானத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். 
உத்தியோகஸ்தர்கள் கடினமான வேலைகளையும் உரிய நேரத்தில் செய்து முடிப்பீர்கள். ஊதிய உயர்வு, மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். வியாபாரிகளுக்கு பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய முறையில் வியாபாரத்தை நவீன மயமாக்குவீர்கள். விவசாயிகள் நீர்வரத்து அதிகரித்து அதிக மகசூலைக் காண்பீர்கள். புது நிலங்களை குத்தகைக்கு எடுத்து தொழிலை விரிவுபடுத்துவீர்கள். 
அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் கட்டளைகளை உடனுக்குடன் நிறைவேற்றி முடிப்பீர்கள். கட்சியில் உயர்வு ஏற்படும். கலைத்துறையினர் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். வெளி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பணவரவை கூட்டிக் கொள்வீர்கள். பெண்மணிகள் புதிய ஆடை அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். மாணவமணிகள் படிப்பில் மிகுந்த உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். பெற்றோராலும் நிறைய அனுகூலங்களைப் பெறுவீர்கள்.
பரிகாரம்: குலதெய்வ வழிபாடு அவசியம். அனுகூலமான தினங்கள்: 11, 12. சந்திராஷ்டமம்: இல்லை.

•••
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.