புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தென்னக அயோத்தி-பத்ராசலம்! 

தென்னக அயோத்தி என்று அழைக்கப்படும் சிறப்பைப் பெற்றுள்ளது, தெலங்கானா மாநிலம், பத்ராசலம் நகரில் கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீசீதா ராமச்சந்திர சுவாமி திருக்கோயில்.

News image
Updated On :22 ஜனவரி 2021, 7:19 am

சுஜித்குமார்

தென்னக அயோத்தி என்று அழைக்கப்படும் சிறப்பைப் பெற்றுள்ளது, தெலங்கானா மாநிலம், பத்ராசலம் நகரில் கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீசீதா ராமச்சந்திர சுவாமி திருக்கோயில். இங்கு ஆண்டுதோறும் ராமநவமியன்று நடைபெறும் ராமர்-சீதா திருக்கல்யாணம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். 

வரலாறு: 17}ஆம் நூற்றாண்டில் பத்ராசலத்தில் வசித்து வந்த ராம பக்தையான தமக்கா என்ற பழங்குடியினப் பெண் ஒருநாள் ராமர், சீதா, லட்சுமணர் சிலைகளை ஒரு புற்றின் உள்ளிருந்து கண்டெடுத்து வழிபட்டு வந்தார். 
அதே பகுதியைச் சேர்ந்த "பக்த ராமதாஸ்' என அழைக்கப்பட்ட "கஞ்சர்ல கோபண்ணா' வரி வசூலிப்பு அதிகாரியாக கோல்கொண்டா நவாப் தானிஷாவிடம் பணிபுரிந்து வந்தார். ராம நாம கீர்த்தனைகள் இயற்றுவதிலும் வல்லவராக இருந்தார். 

இவர் பத்ராசலத்தில் கிடைத்த தெய்வச் சிலைகளைக் கண்டு ஆனந்தமடைந்து, கோயில் கட்டத் தீர்மானித்தார். இதற்காக நிதி தருமாறு கிராம மக்களிடம் கோரினார். அவர்கள் வரியாக வசூலித்த பணத்தைக் கொண்டு கோயில் கட்டும்படியும், அறுவடை முடிந்தபின் செலவு செய்த பணத்தை ஈடு செய்வதாகவும் கூறினர். நவாப்பின் அனுமதி பெறாமலேயே வரித்தொகை ரூ.6 லட்சத்தை செலவழித்து கோயில் திருப்பணிகளை முடித்தார்.

திருப்பணிகள் நிறைவு பெற்ற நிலையில், வரிப்பணத்தை கோபண்ணா முறைகேடாக பயன்படுத்தியதாகக் கூறி, பணி நீக்கப்பட்டு, கோல்கொண்டா சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் துன்புறுத்தப்பட்ட கோபண்ணா ராமரை நினைத்து கீர்த்தனைகளை இயற்றினார். 

ராமோஜி-லஷ்மோஜி:

சிறையில் தனது பக்தன் வாடுவதைக் கண்ட ராமன், லட்சுணன் இருவரும், ராமோஜி}லஷ்மோஜி என்ற பெயரில் வந்து ரூ.6 லட்சம் பணத்தைக் கட்டி கோபண்ணாவை விடுவித்தனர். அவர்கள் அளித்த தொகைக்கு ரசீதையும் நவாப் தானிஷா வழங்கினார். அதை கோபண்ணாவின் தலையணை அடியில் வைத்து விட்டு மறைந்து விட்டனர். ராமரும், லட்சுமணனுமே தன்னிடம் பணத்தை வழங்கினர் என்பதை உணர்ந்த நவாப், தானும் ராம பக்தனாக மாறினார். கோயில் செலவுகளை அரசே ஏற்கவும் உத்தரவிட்டார் என்பது வரலாறு.


இக்கோயில் காலை 7 மணி முதல் பகல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும். பத்ராசலம் கோயிலுக்குச் செல்ல போக்குவரத்து வசதி உள்ளது.  கோயில் அருகிலேயே தங்கும் விடுதிகளும் உள்ளன. ஹைதராபாத், விஜயவாடா, விசாகப்பட்டினம், ராஜமகேந்திரவரம், அனகாபல்லி உள்ளிட்ட இடங்களில் இருந்து பேருந்துகள் செல்கின்றன. செகந்திராபாத்தில் இருந்து ரயில் இயக்கப்படுகிறது. 

மேலும் விவரங்களுக்கு: 08743}232428, 08743}232467.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.