நம்முடைய ஈடு இணையற்ற இந்து மதத்தில் ஆயிரம் தெய்வங்கள் உள்ளன. அதில் ஒருதெய்வம் நம்முடைய மூதாதையர் யாராவது ஒருவருடைய கனவிலோ அல்லது அருள்வாக்கின் மூலமாகவோ வந்து "நான் இந்த ஊரில் இருக்கிறேன் என்னை உன் குலதெய்வமாக வைத்துக்கொள் உன் குடும்பத்தை மட்டுமல்ல; உன்குலத்தையே காக்கிறேன்' என்று கையடித்து சத்திய வாக்கு கொடுத்திருக்கும். ஆகையால் அதை குலதெய்வம் ஆக கொண்டு வழி வழியாக பூஜித்து வருகின்றனர்.
ஆனால் சிலர் எதை தின்றால் பித்தம் தெளியும் என்று குலதெய்வத்தை விட்டு விட்டு வேறு எங்கெல்லாமோ செல்கின்றனர். ஆனால் அந்த தெய்வம் குலதெய்வத்திடம் உத்திரவு கேட்கும்.
ஆகையால் ஒன்றைத் தெரிந்து கொள் - ஒன்றையேநம்பு - ஒன்றையே நிணை } ஒன்றாகிவிடு - ஒன்றில் எல்லாவற்றையும் பார் எல்லாவற்றிலும் அந்த ஒன்றையே பார் ஒன்றாக காண்பதே காட்சி அந்த ஒன்றுதான் ஸ்ரீகுலதெய்வம்.
வீட்டில் பூஜையறையில் குலதெய்வபடத்தை நடுவில் வைத்து கோலமாவில் குலதெய்வம் பெயரை எழுதி நம்வீட்டில் ஓருவர் இருப்பதைப்போலவே பாவித்து நாம் சாப்பிடும் அனைத்தையும் படைத்து சாப்பிடவும்.
குலதெய்வத்திடம் வாய்விட்டு பேசவும். அவனிடம் குறையைச்சொல்லி அழவும்.. அவர் பெயரை எப்போதும் கூறவும்.. நோட்டில் அவர் நாமத்தை எழுதவும் உரு ஏற்றவும். அவனையே நவகிரகமாக பாவித்து அவர் படத்தையும் விளக்கையும் நடுவில் வைத்து ஓன்பது பிரதட்சிணம் செய்து நமஸ்கரிக்கவும்.
தினமும் அவருடைய அஷ்டோத்திரம் முடிந்தபோது சகஸ்ரநாம பூஜை செய்யவும். பிரதி வருடம் தவறாமல் குலதெய்வ கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வேண்டுதலை செலுத்தவும். மனதை ஒருமுகமாக்கி குலதெய்வத்தின் மேலேயே சிந்தனையை செலுத்தி வந்தால், நமக்குள் ஒரு தெய்வீக ஓளி தோன்றி தெய்வீக சக்தி பிறக்கும்.
அதற்கு முன் எந்த கிரகங்களும் எந்த திருஷ்டி போன்ற தோஷங்களும் வேலை செய்யாது. இது அனுபவபூர்வமான உண்மை குலதெய்வத்திடம் பரிபூரண சரணாகதி அடைந்தால் குவலயம் எங்கும் குதூகலம்தான். இது சாதாரண வார்த்தையல்ல சத்தியமான வார்த்தை. இதை எத்தனையோ குடும்பங்களுக்கு எடுத்துச்சொல்லி அவர்கள் ஆனந்தமாக இருக்கின்றனர். ஆகையால் யாம்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதற்காக அடியேனுடைய ஸ்ரீகுலதெய்வம் ஸ்ரீமதுரகாளியம்மன் அருளால் இதை பதிவு செய்கிறேன்.
- மதுரகாளிதாசன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

த.வெ.க.வை ஆதரித்துக் கையெழுத்திட்ட அமமுக எம்எல்ஏ! டிடிவி சொல்வது உண்மையா?

இந்திய கடற்படையின் புதிய தளபதியாக கிருஷ்ணா சுவாமிநாதன் நியமனம்!

நாட்டின் முப்படைத் தலைமைத் தளபதியாக என்.எஸ். ராஜா சுப்ரமணி நியமனம்!

ஐடிஐ, டிப்ளமோ, சிஏ முடித்தவர்களுக்கு வேலை: எங்கு?
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

