சிம்மத்துக்கு பணவரவு: உங்க ராசிக்கு? (வாரப் பலன்கள்)

இந்த வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 
சிம்மத்துக்கு பணவரவு: உங்க ராசிக்கு? (வாரப் பலன்கள்)

இந்த வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

தொழிலில் வரவேண்டிய பணம் தொடர்ந்து வரும். பழைய கடன்களை அடைப்பீர்கள். சிந்தித்து காரியமாற்றுவீர்கள். மருத்துவச் செலவுகள் குறையும். 

உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். வியாபாரிகளுக்கு வருவாய் உயரும்.  விவசாயிகளுக்கு கொள்முதலில் லாபம் அதிகரிக்கும். 

அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்க்கும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். கலைத்துறையினருக்கு வாய்ப்பு சீராகவே இருக்கும்.   பெண்கள் குடும்பத்தில் நிம்மதியைக் காண்பார்கள். 

மாணவர்கள் புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவார்கள்.

சந்திராஷ்டமம்-24

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வழக்குகளில் சாதகமாகவே தீர்ப்பாகும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். எவருக்கும் அறிவுரை வழங்க வேண்டாம். 

உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபாரிகள் புதிய மாற்றங்களைக் கொண்டுவருவார்கள். விவசாயிகள் ஊடுபயிர்களைப் பயிரிட்டு வருவாயைப் பெருக்குவார்கள்.  

அரசியல்வாதிகள் தொண்டர்களுக்கு உதவி செய்வார்கள். கலைத்துறையினரின் திறமைகள் பளிச்சிடும்.  பெண்கள் சேமிக்கத் தொடங்குவார்கள். மாணவர்களுக்கு  வெளிவிளையாட்டுகளில் ஈடுபடுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

வாய்ப்புகளைத் தவறவிடமாட்டீர்கள். முக்கிய முடிவுகளை ஆலோசித்து எடுப்பீர்கள். எதிரிகளை அரவணைத்துச் செல்வீர்கள்.  சுப காரியங்கள் நடந்தேறும். உத்தியோகஸ்தர்கள் விரும்பி இடமாற்றத்தைப் பெறுவார்கள். 

வியாபாரிகளுக்கு எதிரிகளும் உதவி செய்வார்கள். விவசாயிகள் கால்நடைகளால் பயனடைவார்கள். அரசியல்வாதிகளுக்கு வெற்றி கிடைக்கும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் சுமாராகவே இருக்கும். 

பெண்களுக்கு கணவருடன் இருந்த பிரச்னைகள் குறையும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

மனதில் இருந்த கவலைகள் மறையும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். கௌரவமும் அந்தஸ்தும் உயரும். அரசு தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த தாமதம் நீங்கும். 

உத்தியோகஸ்தர்கள் கவனமாகப் பணியாற்றுவார்கள். விவசாயிகள் புதிய யுக்திகளைப் புகுத்துவார்கள். அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவைப் பெறுவார்கள். 

கலைத்துறையினர் புதிய அங்கீகாரங்களைப் பெறுவார்கள். பெண்கள் குடும்பப் பொறுப்பை நல்ல முறையில் ஏற்று நடத்துவீர்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை அள்ளுவார்கள். 

சந்திராஷ்டமம் - இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

பணவரவு நன்றாக இருக்கும்.  மருத்துவச் செலவுகள் குறையும். உடல் ஆரோக்கியம், மன வளம் மேம்பட யோகா கற்றுக் கொள்வீர்கள்.  உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வு உண்டு. 

வியாபாரிகள் லாபத்தைக் காண்பார்கள். விவசாயிகள் புதிய உபகரணங்களை வாங்குவார்கள். அரசியல்வாதிகள் இடையூறுகளைப் பொருட்படுத்தாமல், தங்கள் வேலையில் கவனமாக இருப்பார்கள். 

கலைத்துறையினர் புதிய கலைகளைக் கற்றுக் கொள்வார்கள். பெண்களின் குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். மாணவர்கள் படிப்பிலும்  விளையாட்டிலும் முன்னேற்றமடைவார்கள்.

சந்திராஷ்டமம்} இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

வாக்கு சாதுர்யத்தின் மூலம் காரியங்களைச் சாதிப்பீர்கள்.  நேர்மறை எண்ணங்களுடன் செயல்பட்டு முன்னேறுவீர்கள்.

அரசு சலுகைகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். வியாபாரிகள் பழைய கடன்களை அடைப்பார்கள். 

விவசாயிகள் பால் வியாபாரத்தில் நன்மை அடைவார்கள். அரசியல்வாதிகளின் பெயரும் புகழும் கூடும். கலைத்துறையினரின் எண்ணம் ஈடேறும். பெண்கள் குழந்தைகளால் பெருமை அடைவீர்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

வாக்கு சாதுர்யத்தின் மூலம் காரியங்களைச் சாதிப்பீர்கள்.  நேர்மறை எண்ணங்களுடன் செயல்பட்டு முன்னேறுவீர்கள்.  அரசு சலுகைகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். 

வியாபாரிகள் பழைய கடன்களை அடைப்பார்கள். விவசாயிகள் பால் வியாபாரத்தில் நன்மை அடைவார்கள். அரசியல்வாதிகளின் பெயரும் புகழும் கூடும். கலைத்துறையினரின் எண்ணம் ஈடேறும். பெண்கள் குழந்தைகளால் பெருமை அடைவீர்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

உயர்ந்தவர்களின் நட்பும் ஆதரவும் கூடும். குடும்பத்தில் ஒற்றுமை மேம்படும். வேகத்துடனும் விவேகத்துடனும் பணியாற்றுவீர்கள்.  வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள்.  

உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு கிட்டும். வியாபாரிகள் வியாபார ரீதியான அலைச்சலைக் குறைத்துகொள்ளவும். விவசாயிகள் வருவாய் உயரக் காண்பார்கள்.  

அரசியல்வாதிகளுக்குப் பதவிகள் தேடி வரும். கலைத்துறையினர் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். பெண்கள் குடும்பத்தில் அமைதியைக் காண்பார்கள். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை அள்ளுவார்கள்.

சந்திராஷ்டமம்} இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

தொழிலில் வளர்ச்சி உண்டாகும். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும்.

ஆன்மிகத்தில் ஈடுபடுவீர்கள். சொத்துப் பிரச்னைகள் தீரும். உத்தியோகஸ்தர்களை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள்.

வியாபாரிகளுக்கு ஏற்றுமதி சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். விவசாயிகள் குத்தகைகளில் வருமானத்தைக் காண்பார்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவால் மகிழ்ச்சி அடைவார்கள். கலைத்துறையினருக்கு பயணங்கள் உண்டாகும்.  

பெண்களின் கவலைகள் நீங்கும். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆதரவு உந்து சக்தியாக அமையும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்களால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். சமயோஜித புத்தியால் துயரங்களைக் கடப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பிரச்னைகளில் அமைதி காக்கவும். வியாபாரிகள் கொடுக்கல்} வாங்கலில் சுமாரான லாபத்தையே காண்பார்கள். 

விவசாயிகள் புதிய குத்தகைகளை எடுப்பார்கள். அரசியல்வாதிகள் முக்கிய விஷயங்களில் ஒதுங்கி இருக்கவும்.

கலைத்துறையினர் ரசிகர்களுக்கு உதவிகளைச் செய்வார்கள். பெண்களின் கஷ்டமான நிலை குறையும். மாணவர்கள் விளையாட்டுகளில் ஈடுபடுவார்கள்.

சந்திராஷ்டமம்- 18.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

முயற்சிகளை தள்ளிபோடமல் உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். கொள்கையில் மாற மாட்டீர்கள். குடும்பத்தில் குதூகலம் நிறையும். குழந்தைகளுடன் சுற்றுலா செல்வீர்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு கடன்கள் கிடைக்கும். வியாபாரிகளின் திட்டங்கள் நிறைவேறும்.  விவசாயிகள் புதிய குத்தகைகளை எடுக்க வேண்டாம்.

அரசியல்வாதிகள் மாற்றுக்கட்சியினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும். கலைத்துறையினர் நற்பெயரை எடுப்பார்கள். பெண்கள் சேமிப்பில் ஈடுபடுவார்கள். மாணவர்கள் யோகா கற்றுக் கொள்வார்கள்.

சந்திராஷ்டமம் - 19,20,21.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

எதிர்காலத் திட்டங்களை நிறைவேற்றுவீர்கள்.  உறவினர்களின் ஆதரவு கூடும். விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும். 

உத்தியோகஸ்தர்கள் பணிகளைச் செய்து முடிப்பீர்கள். வியாபாரிகள் மனம் திறந்து பேச வேண்டாம். விவசாயிகளுக்கு விளைபொருள்களால் லாபம் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகளின் எதிரிகளுக்கு பலம் குறையும். கலைத்துறையினருக்கு உதவிகள் கிடைக்கும். பெண்கள் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பார்கள். மாணவர்கள் எண்ணங்கள் ஈடேறும்.

சந்திராஷ்டமம் - 22,23.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com