ஒளஷதகிரியின் பரிமுகத்தோன்
ஸ்ரீஹயக்ரீவர் திருமாலின் 18-ஆவது அவதாரம். மது, கைடபன் எனும் அசுரர்கள் படைக்கும் கடவுளான பிரம்மாவிடமிருந்த வேதங்களைப் பறித்துக் கொண்டு பாதாள உலகத்துக்குச் சென்றனர்.


ஸ்ரீஹயக்ரீவர் திருமாலின் 18-ஆவது அவதாரம். மது, கைடபன் எனும் அசுரர்கள் படைக்கும் கடவுளான பிரம்மாவிடமிருந்த வேதங்களைப் பறித்துக் கொண்டு பாதாள உலகத்துக்குச் சென்றனர். அதனை மீட்டுத் தரும்படி பிரம்மா, காக்கும் கடவுளான விஷ்ணுவை வேண்டினார்.
இரு அசுரர்கள் குதிரை முகம் உடையவர்கள் என்பதால் விஷ்ணுவும் குதிரை முக அவதாரம் ஞானத்துடன் போர் புரிந்தார். போரிட்டு வேதங்களை மீட்டு பிரம்மனிடம் தந்தார்.குதிரை முகம் தமிழில் பரிமுகம் எனவும் வடமொழியில் ஹயக்ரீவம் எனவும் வழங்கப்படும். அவர் காட்சி தந்து அருளிய இடம் திருவஹீந்தபுரம் ஒüஷதகிரி மலையாகும்.
லட்சுமி ஹயக்ரீவர் அழித்த பின்னும் ஹயக்கிரீவருக்கு உக்கிரம் தணியாததால் சாந்தி தவழும் லட்சுமி தேவியை அவர் மடியில் அமர வைக்க கோபம் தணிந்துசாந்த அனுக்ரக மூர்த்தியாக லட்சுமி ஹயக்ரீவர் ஆனார். தூய மெய்ஞான வடிவமும் ஸ்படிகம் போன்று தூய்மையானவரும் அறிவு யாவற்றுக்கும் ஆதாரமானவருமாகிய ஹயக்ரீவருக்கு கல்விக் கருவாக இருந்தமையால் கல்விக்குத் தெய்வமாகவும், லட்சுமி உடனிருப்பதனால் செல்வத்துக்குத் தெய்வமாகவும் ஹயக்கிரீவர் வணங்கப்படுகிறார்.
மருந்துமலையில் தவம்
ஹனுமன் போர்க்களத்தில் மயக்கமுற்ற இராம, இலக்குவர் படைவீரர்களை மயக்கத்திலிருந்து எழுப்ப சிரஞ்சீவி மலையை எடுத்துக் கொண்டு பறந்தபோது, சிறு துண்டு கெடில நதிக்கரையில் மலைத்துண்டாக விழுந்தது. அது மருத்துவக் குணம் நிறைந்த ஒüஷதகிரியாக உருவாயிற்று. பல அல்லல்களுக்கிடையே திருவஹீந்தபுரத்தில் குடியேறிய சுவாமி வேதாந்த தேசிகர் கீழே இருக்கும் தேவநாதப்பெருமாளை வணங்கிவிட்டு மேலே சென்று ஹயக்ரீவர் குறித்து தவம் இயற்றத் துவங்கினார்.
ஹயக்ரீவரை தரிசித்தே ஆக வேண்டும் எனும் எண்ணத்தில் கடும் தவம் மேற்கொள்ள அவ்விடத்தில் ஹயக்ரீவர் அவதரித்து ஆவணி திருவோணத்தில் வடக்கு திசையிலிருந்து தெற்கு நோக்கி தேசிகருக்கு காட்சி தந்து அனுக்கிரகித்ததாக வரலாறு சொல்லப்படுகிறது. அதே இடத்தில் கருடன் தேசிகருக்குக் காட்சிதந்து யோக ஹயக்ரீவரை பூசித்து வரம் வழங்கினார். ஒரு சிறு குன்றில் பலநாள் அன்ன ஆகாரமின்றி கருட மந்திரம் ஜபித்து கருடன் (வேதத்தின் உருவம்) தரிசனம் தந்து ஹயக்ரீவ மந்திர உபதேசம் செய்து, தேசிகன் விருப்பப்படி அவரது நாக்கில் குடி கொண்டார். தனது சிலா ரூபத்தையும் கொடுத்தார். அந்த ஹயக்ரீவ விக்ரஹம் இன்றும் தேவநாத பெருமாள் சந்நிதியில் எழுந்தருளியிருக்கிறது.
தேசிகரின் சிம்மாசனாபதிகள் 74 பேரை நினைவுபடுத்துவதாக 74 படிகள் கொண்டு ஒüஷதகிரியில் பின்னாளில் காட்சிதந்த அவ்விடத்தில் லட்சுமி
ஹயக்ரீவ விக்ரக பிரதிஷ்டையும் சந்நிதியும் அருகில் தேசிகர் தவமிருந்த இடத்தில் மண்டபமும் அமைக்கப்பட்டது.
ஒளஷதகிரி ஹயக்ரீவர் மருந்துமலை ஹயக்ரீவர் சந்நிதியில் மூலவராக லட்சுமி நரசிம்மர் சிலாத்திருமேனியாக பிரதானமாக எழுந்தருளியுள்ளார். வலது கால் தொங்க விட்டு இடது கால் மடிந்த நிலையில் அதன் மீது ஸ்ரீலட்சுமி அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். அவர் எப்போதும் ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை உச்சரித்துக்கொண்டிருப்பதைக் காட்டுகிறது.
சங்கு, சக்கரத்தோடு, வியாக்கியான முத்திரை, ஏடும் உள்ளன. அந்த சந்நிதியிலேயே வலதுபுறம் வேணுகோபாலரும், இடது கைபுறத்தில் ஆசார்யன் தேசிகரும் மேற்குப்பார்த்து யோக நரசிம்மரும் எழுந்தருளியுள்ளனர்.
அசுரன் ஹயக்ரீவன் நான்கு வேதங்களையும் கடலுக்குள் கொண்டு சென்று ஒளித்து வைத்த போது, ஸ்ரீஹயக்ரீவர் அவனைக் கொன்று வேதங்களை மீட்டு வந்த வேத சொரூபமாக விளங்குகிறார். அவித்யையும், அஞ்ஞானத்தையும் அகற்றும் சந்திரனின் அழகிய ஒளிபோல ஸ்ரீஹயக்ரீவர் விளங்குவதால், அவர் சந்திரப் பிரபையில் அமைந்துள்ளது போல சித்தரிக்கப்படுகிறார்.
தரிசன பலன்
ஸ்ரீ ஹயக்ரீவரை வணங்குவதால், ஞானம் அதிகரிக்கும். சிந்தனையும் செயலாற்றும் திறமும் அதிகரிக்கும்.கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவர்.
ஹயக்ரீவர் ஜயந்தி இவ்வாண்டு ஸ்ரீஹயக்ரீவர் ஜயந்தி உத்ஸவம் ஆகஸ்ட் 30}இல் தொடங்கி, செப். 8-இல் ஹயக்ரீவ ஜயந்தியுடன் நிறைவடைகிறது.
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திருவஹீந்தபுரம் கடலூர் அருகில் 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
விவரங்களுக்கு 04142287515; 9489228436;
-இரா.இரகுநாதன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...