பதவி உயர்வு கிடைக்கப்போகுது இந்த ராசிக்கு: வாரப் பலன்கள்

இந்த வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 
ஜூலை மாத பலன்கள்
ஜூலை மாத பலன்கள்

இந்த வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

மனதில் புதுவித எண்ணங்கள் தோன்றும். நிம்மதி நிறையும். தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.  குடும்பத்துடன் திருத்தலங்களுக்குச் செல்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் பொறுப்புகள் கூடும். வியாபாரிகள் கூட்டாளிகளுடன் பழகுவார்கள்.  விவசாயிகள் வசதிகளைப் பெருக்குவார்கள்.

அரசியல்வாதிகள் எச்சரிக்கை உணர்வுடன் வெற்றியை முடிப்பார்கள்.

கலைத்துறையினரின் கோரிக்கைகள் நிறைவேறும்.  பெண்கள் தங்களது குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவார்கள். மாணவர்களின் பெயர் உயரத் தொடங்கும்.

சந்திராஷ்டமம் - 10,11.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

உடல் ஆரோக்கியம், மன வளம் மேம்படும்.  சிறு பயணங்களால் நன்மை உண்டாகும்.  புகழ், அந்தஸ்து உயரும்.  பெற்றோரின் மனம் கோணாமல் நடப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் கடன் கிடைக்கும். வியாபாரிகள் புதிய இலக்குகளை எட்டுவார்கள்.

விவசாயிகளின் ஆளுமைத்திறன் அதிகரிக்கும்.  அரசியல்வாதிகள் செயல்களில் வெற்றியைக் காண்பார்கள். கலைத்துறையினர் பாராட்டுகளைப் பெறுவார்கள்.

பெண்கள் கணவர் வழி உறவினர்களிடம் கருத்தொற்றுமையுடன் பழகுவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - 12,13.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். முடிவுகளை தெளிவாக எடுப்பீர்கள். வெளியூரில் இருந்து அனுகூலமான செய்திகள் வந்து சேரும்.

வசிக்கும் வீட்டை மாற்றுவார்கள். சுப காரியங்கள் நடக்கும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வைப் பெறுவார்கள்.

வியாபாரிகளுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். விவசாயிகள் புதிய குத்தகைகளை எடுப்பார்கள். அரசியல்வாதிகள் எடுத்த காரியத்தைக் கச்சிதமாக முடிப்பார்கள்.

கலைத்துறையினர் பாராட்டு மழையில் நனைவார்கள்.  பெண்களுக்கு பெரியோரின் ஆசி கிடைக்கும். மாணவர்களின் தேக ஆரோக்கியம் மேம்படும்.

சந்திராஷ்டமம் -14.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

முக்கியஸ்தர்களின் அறிமுகம் கிடைக்கும். பேச்சில் சாதுர்யம் கூடும். தாய்வழி உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்துடன் இன்பமாய் பொழுதைக் கழிப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் தவறுகளைத் திருத்திக் கொண்டு உழைப்பார்கள். வியாபாரிகள் சிந்தித்து செயல்படவும்.

அரசியல்வாதிகள் போட்டிகளுக்கு ஏற்ப செயல்பாடுகளை மாற்றிக் கொள்வார்கள்.  கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் வரும். பெண்கள் பெரியோரை அனுசரித்து நற்பெயரை எடுப்பார்கள்.

மாணவர்களுக்கு ஆசிரியர்களின் அறிவுரை உந்து சக்தியாய் அமையும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

தொழிலில் ஏற்றம் உண்டாகும்.  திட்டமிட்ட செயல்கள் நிறைவேறும். யோகா, பிரணாயாமம் கற்றுக் கொள்வீர்கள். அரசு சலுகைகள் தேடி வரும். போட்டிகளைச் சமாளிப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் கூட்டாளிகளுடன் வெற்றியைக் காண்பீர்கள். விவசாயிகள் புதிய வாகனங்கள், கால்நடைகளை வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகள் மேலிடத்திடம் கவனமாக இருக்கவும்.  கலைத்துறையினர் வெளியூர் நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். பெண்களுக்கு மகிழ்ச்சி நிறையும். மாணவர்கள் தவறான பழக்கத்தில் இருந்து விடுபடுவார்கள்.

 சந்திராஷ்டமம் - இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு உண்டாகும். வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உடன்பிறந்தோருடன் அனுசரித்து  நடப்பீர்கள்.  புதிய சேமிப்புத் திட்டங்களில் சேருவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் சகஜமாகப் பழகுவீர்கள். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும்.  விவசாயிகளுக்கு பழைய குத்தகை பாக்கி வசூலாகும்.

அரசியல்வாதிகள் தொண்டர்களுக்கு உதவுவார்கள். கலைத்துறையினரின் திறமைகள் பளிச்சிடும். பெண்கள் கணவரின் குடும்பத்தாருடன் பாசமாகப் பழகுவார்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் வெற்றி பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

பிறருக்கு உதவிகளைச் செய்வீர்கள். தொழிலில் வளர்ச்சி உண்டாகும். செல்வாக்கு உயரும். நோய்கள் அகன்று ஆரோக்கியம் மேம்படும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் புதிய பயிற்சிகளை மேற்கொள்வார்கள். வியாபாரிகளுக்குச் செல்வாக்கு உயரத் தொடங்கும். விவசாயிகள் புதிய உபகரணங்களை வாங்குவீர்கள். அரசியல்வாதிகள் கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாகச் செய்வார்கள்.

கலைத்துறையினருக்கு புது அனுபவமும் புரிதலும் உண்டாகும். பெண்களுக்கு உடன்பிறந்தோரின் ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் உழைத்து முன்னேறுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

தொழிலை மேன்மையாக நடத்துவார்கள். புத்துணர்வு பெறுவீர்கள். பெற்றோரின் ஆலோசனை நன்மை அளிக்கும். அரசு விஷயங்களில் காலதாமதம் குறையும்.

உத்தியோகஸ்தர்கள் வருமான உயர்வைக் காண்பீர்கள். வியாபாரிகள் சாதகமான கொடுக்கல் வாங்கலைச் சந்திப்பார்கள். விவசாயிகள் குடும்பத்தில் கலகலப்பான சூழலைக் காண்பார்கள்.

அரசியல்வாதிகள் மேலிடத்துக்குத் தகவல் அனுப்பும்போது எச்சரிக்கை தேவை. கலைத்துறையினருக்கு பயணம் உண்டாகும். பெண்களுக்கு ஆன்மிகப் பலம் அதிகரிக்கும். மாணவர்கள் பொறுப்புடன் நடப்பார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

இழுபறியாக இருந்த விஷயங்கள் முடிவுக்கு வரும்.  உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும்.  வெளியூரில் இருந்து சாதகமான செய்தி கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.  வியாபாரிகளின் முயற்சிக்கு முன்னேற்றம் உண்டாகும். விவசாயிகள் கால்நடைகளின் மூலம் வருமானத்தைப் பெறுவார்கள். அரசியல்வாதிகளுக்கு சிந்தனை உருவாகும்.

கலைத்துறையினர் மறைமுகத் திறமைகளை வெளிப்படுத்தி, பாராட்டுகளைப் பெறுவார்கள்.  பெண்கள் உபரி வருவாயை கோயிலுக்குச் செலவழிப்பார்கள். மாணவர்களுக்கு உயர்படிப்புக்கான சிந்தனை மேலோங்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

தொழிலில் லாபம் கிடைக்கும்.  கடன் பிரச்னைகள் கட்டுக்குள் இருக்கும். பெற்றோருக்கு உதவிகளைச் செய்வீர்கள்.  எதிர்பாராத இடங்களில் இருந்து அரிய வாய்ப்புகள் தேடி வரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். வியாபாரிகள் புதிய சந்தைகளை நாடிச் செல்வார்கள். விவசாயிகள் பயிர் விளைச்சலைக் காண்பார்கள். அரசியல்வாதிகளுக்கு நன்மைகள் உண்டாகும்.

கலைத்துறையினருக்கு ரசிகர் மன்றங்களுக்குச் செலவு செய்யும் வாய்ப்பு உண்டாகும். பெண்கள் குடும்பத்தில் நிம்மதியைக் காண்பார்கள். மாணவர்களின் கல்வி வளர்ச்சி மேம்படும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

ஆக்கப்பூர்வமாகச் சிந்தித்து காரியமாற்றுவீர்கள். சுப காரியங்கள் நடக்கும். தொழில் மேம்பாடு அடையும்.  உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின்

வேலையை பகிர்ந்து கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். விவசாயிகள் குத்தகை பாக்கிகளை வசூலிப்பார்கள்.  அரசியல்வாதிகள் கொள்கைப் பிடிப்புடன் காரிய மாற்றுவார்கள். கலைத்துறையினர் தங்களது 
கடமைகளை நிம்மதியாகப் பணியாற்றுவார்கள். 

பெண்கள் புதிய ஆடை, அணிகலன்களை வாங்குவார்கள். மாணவர்கள் ஆசிரியர்களை அனுசரித்து நடந்துகொள்வார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து நடப்பீர்கள். கடன் யாருக்கும் தர வேண்டாம். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்துடன் திருத்தலங்களுக்குச் செல்வீர்கள்.

வீண் வாக்குவாதம் வேண்டாம். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய வேலை, அதிக ஊதியம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு வெற்றி கிடைக்கும். விவசாயிகள் கீரைகள், காய்கறிகள் பயிரிட்டு லாபம் ஈட்டுவார்கள். அரசியல்வாதிகளுக்கு வழக்குகளில் இருந்து விடுதலை கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு யோகம் உண்டு. பெண்கள் குடும்பக் கௌரவத்தைக் காப்பார்கள். மாணவர்கள் சாதனை செய்வார்கள்.

 சந்திராஷ்டமம் - 8,9.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com