அதிர்ஷ்டம் தேடி வரப்போகுது இந்த ராசிக்கு: வாரப் பலன்கள்!

இந்த வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 
அதிர்ஷ்டம் தேடி வரப்போகுது இந்த ராசிக்கு: வாரப் பலன்கள்!

இந்த வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் உண்டாகாது. முகத்தில் பொலிவும் நடையில் மிடுக்கும் கூடும். தொழிலை சிறப்பாக நடத்துவீர்கள்.  கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு நிலுவைத் தொகை கிடைக்கும்.  வியாபாரிகளுக்கு வியாபாரம் விருத்தியாகும். 

விவசாயிகளுக்கு கால்நடைகளால் லாபம் கூடும். அரசியல்வாதிகள் பழைய விரோததத்தை மறந்து, கட்சிப் பணியாற்றுவார்கள்.

கலைத்துறையினர் பலன்களைப் பெறுவார்கள். பெண்கள் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

உங்கள் திட்டங்களை முறைப்படுத்தி வாழ்வில் முன்னேறுவீர்கள்.  நன்மைகள் அதிகம் உண்டாகும். பெற்றோர் வழியில் சொத்துகள் சேரும். பண நடமாட்டம் அதிகரிக்கும். 

உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வுடன் இடமாற்றம் ஏற்படும். வியாபாரிகளில் புகழ் பெருகும். விவசாயிகள் புது நிலங்களைக் குத்தகைக்கு எடுப்பார்கள். 

அரசியல்வாதிகள் தொண்டர்களிடம் கோபமாகப் பேச வேண்டாம். கலைத்துறையினர் அனுசரணையாக நடக்கவும். பெண்களின் குடும்பத்தில் அசையா சொத்துகள் சேரும். மாணவர்கள் யோகா கற்றுக் கொள்வார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

பொருளாதாரம் உயரத் தொடங்கும்.  பூர்வீக சொத்துகளால் ஆதாயம் கிடைக்கும்.  திடீர் திருப்பங்களால் மாற்றம் உண்டாகும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள்.  

உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்புகள் தேடி வரும். வியாபாரிகளின் வருமானம் பன்மடங்கு உயரும். விவசாயிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பால் விளைச்சல் பெருகும்.

அரசியல்வாதிகளுக்கு தொண்டர்கள் ஆதரவு அளிப்பார்கள். கலைத்துறையினருக்கு அதிகாரப் பதவி தேடி வரும். பெண்கள் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துவார்கள். மாணவர்கள் நன்கு படிப்பார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். தொழிலில் அபரிதமிதமான வளர்ச்சி உண்டாகும். அதிர்ஷ்டங்கள் தேடி வரும்.  நிலம், வாகனங்களை வாங்குவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் வெளிப்படையாகப் பேச வேண்டாம். வியாபாரிகளுக்குப் புதிய பாதை புலப்படும். விவசாயிகள் குத்தகை நிலங்களை மீட்டெடுப்பார்கள். 

அரசியல்வாதிகளுக்கு மிதமிஞ்சிய பொருளாதார வளம் உண்டாகும். கலைத்துறையினர் மறக்க முடியாத சில சம்பவங்களால் மகிழ்வார்கள். பெண்கள் சுப நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

சமுதாயத்தில் உயர்ந்தோரின் நட்பும் ஆதரவும் கிடைக்கும். கடன் பிரச்னைகள் குறையும். பூர்வீக சொத்து விஷயங்களில் சமரசம் உண்டாகும். சிலர் புதிய வீடுகளுக்கு மாறுவார்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு பிறர் ஆதரவு கிடைக்கும்.  வியாபாரிகளுக்கு தொழில் நிலைமை சீராகும். விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகள் தங்கள் காரியங்களை தொண்டர்கள் உதவியுடன் மேற்கொள்வார்கள்.  கலைத்துறையினருக்கு சந்தோஷம் அதிகரிக்கும். பெண்களின் காரியங்கள் சாதகமாகும். மாணவர்களால் பெற்றோருக்கு மகிழ்ச்சி உண்டாகும்.

சந்திராஷ்டமம் -இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.  பணத்தேவை பூர்த்தியாகும்.  உயர்ந்த பொறுப்புகளைப் பெறுவீர்கள். எதிர்மறை எண்ணங்களைத் தவிர்ப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களிடமிருந்த மனக்கசப்புகள் நீங்கும். வியாபாரிகள் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவார்கள். விவசாயிகள் நவீன உபகரணங்களை வாங்குவார்கள். 

அரசியல்வாதிகள் மேலிடத்தை அனுசரித்து நடப்பீர்கள். கலைத்துறையினருக்கு வெளிநாட்டு நிகழ்ச்சிகள் ஒப்பந்தமாகும்.

பெண்கள் ஆடை, ஆபரணங்களை வாங்குவார்கள். மாணவர்கள் உடல் நலத்தைக் காத்துக் கொள்வார்கள்.


சந்திராஷ்டமம் - இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

புகழ்மிக்கவர்கள் பின்புலமாக இருப்பார்கள். குடும்பத்தில் குதூகலம் பூத்துக் குலுங்கும்.  உங்கள் சமயோஜித புத்தியை பலரும் பாராட்டுவார்கள். 

உத்தியோகஸ்தர்களுக்குத் தலைமைப் பதவிகள் தேடி வரும். வியாபாரிகளுக்கு கூட்டாளிகள் உதவி செய்வார்கள்.  விவசாயிகள் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவார்கள். அரசியல்வாதிகள் எதிர்க்கட்சியினரைக் கண்காணிப்பார்கள். 

கலைத்துறையினருக்கு பிரிந்து சென்ற சக கலைஞர்கள் உடன் சேருவார்கள். பெண்களுக்கு நல்ல காரியங்கள் நடைபெறும். மாணவர்களின் உழைப்புக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

உற்சாகமான மனநிலையில் இருப்பீர்கள்.  உடனிருப்போர் உதவியாக இருப்பார்கள்.  மனதுக்கு இனிய பயணம் அமையும்.  சமுதாயத்தில் அந்தஸ்தும் கௌரவமும் உயரும். 

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் சொற்படி நடப்பார்கள்.  வியாபாரிகள் லாபம் ஈட்டுவார்கள்.  விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும்.

அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளை மேற்கொள்வார்கள். கலைத்துறையினருக்கு பாராட்டுகள் கிடைக்கும்.  பெண்கள் நவீன உபகரணங்களை வாங்குவார்கள்.  மாணவர்கள் புதிய படிப்பில் 
ஈடுபடுவார்கள்.

சந்திராஷ்டமம் -இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

குடும்பத்தில் அமைதி நிலவும்.  தொழிலில் கண்ணும் கருத்துமாய் இருப்பீர்கள். வருமானம் சீராகவே இருக்கும். திட்டங்களை முறைப்படுத்துவீர்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு வருவாய் சிறப்பாகவே இருக்கும்.  வியாபாரிகள் புதிய பொருள்களை வாங்கி விற்பனை செய்வார்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளை நாடிப் பெறுவார்கள்.

அரசியல்வாதிகள் எதிரிகளிடம் கவனம் தேவை. கலைத்துறையினர் புதிய அங்கீகாரத்தைப் பெறுவார்கள்.

பெண்கள் இல்லத்தில் மழலைப் பாக்கியம் உண்டாகும். மாணவர்கள், ஆசிரியர்களின் பாராட்டைப் பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - மார்ச் 3,4,5.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

புதிய நட்பு கிடைக்கும். நல்ல நிகழ்ச்சிகள் நடைபெறும். சமூகத்தில் புகழ் உயரும். அநாவசியப் பயணங்கள் ஏற்படாது. 

உத்தியோகஸ்தர்கள்  தங்கள் பணியை மட்டும் கவனிப்பார்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல்} வாங்கல் பிரச்னைகளில் சாதகமான சூழல் நிலவும். விவசாயிகள் நவீன உபகரணங்களை வாங்குவார்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களை அரவணைத்து வேலை செய்வார்கள். கலைத்துறையினர் ரசிகர்களுக்கு உதவி செய்வார்கள். பெண்கள் குழந்தைகளைத் திருத்துவார்கள். மாணவர்களுக்கு பிறர் உதவிகளை செய்வார்கள்.

சந்திராஷ்டமம்} மார்ச் - 6,7.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

சமுதாயத்தில் அந்தஸ்து ஏற்படும்.  கணக்கு வழக்குகளை சரியாக வைத்துகொள்வீர்கள்.  பங்காளி வழியில் எச்சரிக்கையுடன்இருக்கும்.

உத்தியோகஸ்தர்கள் சிலருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். வியாபாரிகள் திட்டமிட்ட வேலைகளைத் தீவிரமாகச் செய்து முடிப்பார்கள். விவசாயிகள் பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வார்கள். 

அரசியல்வாதிகள் மேலிடத்தின் அன்பைப் பெற்று சாதமாக்கிக் கொள்வார்கள். கலைத்துறையினர்  நண்பர்களின் உதவிகளைப் பெறுவார்கள்.  பெண்கள் யோகா கற்பார்கள்.  மாணவர்கள் கல்வியில் சாதனைகளை செய்வார்கள்.

சந்திராஷ்டமம் - மார்ச் 8,9.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

பழைய கடன்களை அடைப்பீர்கள். உங்கள் செயல்களால் விறுவிறுப்பு கூடும். நண்பர்களுடன் இணைந்து புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உடல்சோர்வைப் பொருள்படுத்தாமல் உழைப்பீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் கவனமாக பேசவும். வியாபாரிகளுக்கு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். விவசாயிகள் புதிய குத்தகைகளினால் விளைச்சல் நன்றாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு புகழ் அதிகரிக்கும்.

கலைத்துறையினருக்கு பணவரவு பெருகும். பெண்கள்ஆன்மிகச் சுற்றுலா செல்வார்கள்.  மாணவர்கள் விளையாட்டுகளில் வெற்றி பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com