வாழ்க்கைத் தரம் உயரும் இந்த ராசிக்கு: வார பலன்கள்!

இந்த வாரம் 12 ராசிக்கும் என்னென்ன பலன்கள் என்று தெரிந்துகொள்ளலாம்...
வார பலன்கள்
வார பலன்கள்
Published on
Updated on
3 min read

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஜூன் 21 - 27) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

அவமதித்தவர்களும் நட்புடன் பழகுவார்கள். செல்வாக்கான பதவிகள் கிடைக்கும். தொழிலில் வளர்ச்சி உண்டாகி, வருமானம் வரக் காண்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களின் அசாத்தியத் துணிச்சல் வெற்றியைத் தேடித் தரும். வியாபாரிகளுக்கு வருமானம் உயரத் தொடங்கும். விவசாயிகளுக்கு அரசு உதவிகள் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் பிறரை அரவணைத்துச் செல்வீர்கள். கலைத் துறையினர் முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள்.

பெண்களுக்கு கணவரின் ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் வெளியூர் சுற்றுலா சென்று வருவீர்கள்.

சந்திராஷ்டமம் - ஜூலை 17, 18.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

வாழ்க்கைத் தரம் உயரும். எவருக்கும் கடன் வாங்கித் தர வேண்டாம். ரகசியங்களைப் பகிர வேண்டாம். காரியங்களைத் திட்டமிட்டு முடித்து விடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் பிறரின் அன்பைப் பெறுவீர்கள். வியாபாரிகள் புதிய செயல்முறைகளைப் பாராட்டுவார்கள். விவசாயிகளின் குத்தகை பாக்கிகள் வசூலாகும்.

அரசியல்வாதிகளின் புகழ் உயரும். கலைத் துறையினர் சக கலைஞர்களின் ஆதரவு கிடைக்கும்.

பெண்கள் குழந்தைகளுக்குச் சிறிது செலவு செய்ய நேரிடும். மாணவர்கள் உடல் ஆரோக்கியத்தைப் பேணி காப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் அமைதி நிலவும். உறவினர்களை அனுசரித்து நடப்பீர்கள். மதிப்பும் மரியாதையும் உயரும். பிரச்னைகள் முடிவுக்கு வரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு போனஸ் கிடைக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல்} வாங்கல் விஷயங்கள் முடிவுக்கு வரும். விவசாயிகள் நீராதாரத்தைத் தக்க வைத்துகொள்வீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சியில் புதிய பதவிகளைப் பெறுவீர்கள். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

பெண்கள் பொருளாதார வளர்ச்சியால் மகிழ்வீர்கள். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

குடும்பத்தில் உற்சாகம் கரை புரளும். குழந்தைகளின் வளர்ச்சியால் பெருமை அடைவீர்கள். செல்வாக்கான பதவிகள் கிடைக்கும். வருமானம் சிறக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு புதிய அனுபவங்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்களின் ஆதரவு பெருகும். விவசாயிகள் பிறருக்கு உதவிகளைச் செய்வீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு எதிரிகளின் பலம் குறையும். கலைத் துறையினர் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

பெண்கள் பெற்றோருக்கு உதவியாக இருப்பீர்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

உடல் ஆரோக்கியமும் மன வளமும் கூடும். வீண்வாக்குவாதங்களைத் தவிர்ப்பீர்கள். கடமையுடன் செயலாற்றுவீர்கள். வருமானம் உயரும்.

உத்தியோகஸ்தர்கள் சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கலில் சிறப்பைக் காண்பீர்கள். விவசாயிகள் நல்ல விளைச்சலைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகள் மேலிடத்தை அனுசரித்து நடப்பீர்கள். கலைத் துறையினர் புதிய நுட்பங்களைச் செயல்படுத்துவீர்கள்.

பெண்கள் கணவர் குடும்பத்துடன் இணக்கமாகப் பழகுவீர்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

தொழிலில் வளர்ச்சி உண்டாகும். உயர்ந்தோரின் ஆதரவு கிடைக்கும். உடனிருப்போருக்கு அறிவுரைகளைக் கூறுவீர்கள். போட்டிகளை எதிர்கொள்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் பிறருக்கு உதவுவீர்கள். வியாபாரிகளின் முயற்சிகள் பலன்களை அளிக்கும். விவசாயிகள் புதிய குத்தகைகளைப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் எதிர்க்கட்சியினரின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பீர்கள். கலைத் துறையினர் ரசிகர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

பெண்கள் புதிய பொருள்களை வாங்குவீர்கள். மாணவர்கள் நல்ல நண்பர்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

தொழிலை விரிவுபடுத்துவீர்கள். முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பயணம் செய்ய நேரிடும். நெடுநாளைய ஆசைகள் பூர்த்தியாகும்.

உத்தியோகஸ்தர்கள் தங்களது வேலைகளைப் பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். வியாபாரிகள் தன்னிச்சையாகச் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள்.

விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகளின் எண்ணங்கள் சரியான நேரத்தில் பலனளிக்கும். கலைத் துறையினருக்கு

நற்பெயர் கிடைக்கும். பெண்கள் தங்களது பேச்சுத்திறமைகளால் சாதிப்பீர்கள். மாணவர்களுக்கு அறிவாற்றலும் ஞாபகச் சக்தியும் கூடும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடக்கும். அரசு ஆதாயங்கள் கிடைக்கும். புதிய சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். காரியங்களில் வெற்றி பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அதிருப்திகளை வெளிப்படுத்த வேண்டாம். வியாபாரிகள் கவனமாக இருக்கவும். விவசாயிகளுக்கு உற்பத்தி நன்றாகவே இருக்கும்.

அரசியல்வாதிகளுக்கு அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள்.

பெண்களுக்கு உறவினர்களிடம் பாசம் மேலோங்கும். மாணவர்கள் எடுக்கும் முயற்சிகள் நிறைவேறும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசி கிடைக்கும். வருமானம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். பிறரிடம் அன்பு காட்டுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் அனுசரணையாக இருப்பீர்கள். வியாபாரிகளுக்கு கடன் வசூலாகும். விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

அரசியல்வாதிகளின் திட்டங்கள் வெற்றி பெறும். கலைத்துறையினருக்கு பிறர் ஆதரவு நல்குவார்கள்.

பெண்களுக்கு குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்கள் விளையாட்டுகளில் திறமைகளை மேம்படுத்திக் கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

பொருளாதாரத்தில் மேன்மை கிடைக்கும். ஆன்மிகம், தத்துவம், இலக்கியங்களில் ஆர்வம் உண்டாகும். உடன்பிறந்தோரிடம் கருத்து வேறுபாடுகள் மறையும். வழக்குகள் முடிவுக்கு வரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளால் நன்மை உண்டாகும். வியாபாரிகளுக்கு விற்பனை அதிகரிக்கும். விவசாயிகள் நல்ல விளைச்சலைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு அந்தஸ்து உயரும். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

பெண்கள் குடும்பத்தில் வீண் பேச்சுகளில் ஈடுபட மாட்டீர்கள். மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

அந்தஸ்தும், கௌரவமும் உயரும். செயல்களில் இருந்த முட்டுக்கட்டைகள் நீங்கும். குடும்பத்தினரை அரவணைத்துச் செல்வீர்கள். இறைவழிபாடு அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்புக்கேற்ற வருவாய் கிடைக்கும். வியாபாரிகள் கவனமாக இருக்கவும். விவசாயிகளுக்கு கால்நடைகளால் லாபம் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகளுக்கு பேச்சில் கவனம் தேவை. கலைத் துறையினரின் புகழ் உயரும். பெண்கள் பிறரிடம் விட்டுக் கொடுத்து நடப்பீர்கள். மாணவர்களுக்கு நேர்மறைச் சிந்தனைகள் அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம் - ஜூலை 12, 13.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

பொருளாதார நிலை உயரும். செலவுகளைக் குறைப்பீர்கள். அளவுடன் பேசிப் பழகுவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகள் தங்களது அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வீர்கள்.

விவசாயிகளுக்கு புதிய சந்தைகளில் லாபம் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு உயர்பதவிகள் தேடி வரும். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெற கடுமையாக உழைப்பீர்கள்.

பெண்கள் சேமிப்புக்கு வழிவகை செய்வீர்கள். மாணவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெற முயற்சிப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - ஜூலை 14, 15, 16.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com