இந்த வாரம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும்?

இந்த வாரம் யாருக்கு என்னென்ன பலன்கள்....வாங்க தெரிஞ்சிக்கலாம்.
இந்த வாரம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும்?

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (மார்ச் 22- 28) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

நடைமுறைக்கு சாத்தியமான விஷயங்களைச் செயல்படுத்த முனைவீர்கள், சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள்.

கலந்தாலோசித்தே முடிவுகளை எடுப்பீர்கள். மனதில் புதிய தெளிவு பிறக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை கூடும். வியாபாரிகள் கவனமாக இருந்து நஷ்டங்களைத் தவிர்ப்பீர்கள்.

விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் பிறருக்கு உதவிகளைச் செய்வீர்கள்.

கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்கள் கணவருக்கு உதவியாய் இருப்பீர்கள். மாணவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்துவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

மன உறுதியோடு முயற்சிப்பீர்கள். பண நெருக்கடி இருக்காது. தொழிலில் இருந்த பிரச்னைகள் மறையும். முடிவுகளை உடனே எடுப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் உழைத்து வெற்றி பெறுவீர்கள். வியாபாரிகள் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். விவசாயிகள் எதிர்பார்த்த மகசூலைப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் மௌனம் சாதிப்பதே நல்லது. கலைத் துறையினருக்கு இருந்த அவநம்பிக்கைகள் அகலும்.

பெண்கள் அமைதியாக இருந்து குழப்பங்களைத் தவிர்ப்பீர்கள். மாணவர்கள் சுறுசுறுப்புடனும், தன்னம்பிக்கையுடனும் இருப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

தடைகள் தானாகவே அகலும். எதிர்ப்புகளைச் சமாளிப்பீர்கள். குடும்பப் பொறுப்புகளை ஏற்பீர்கள். தெய்வப் பலத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் தொல்லைகளில் இருந்து விடுபடுவீர்கள். வியாபாரிகளுக்கு உழைப்புக்குத் தகுந்த பலன் கிடைக்கும். விவசாயிகளுக்கு பணிகள் திருப்திகரமாய் இருக்கும்.

அரசியல்வாதிகள் நிதானமாய் செயல்படுவீர்கள். கலைத் துறையினருக்கு பாராட்டுகளும், பணவரவும் வந்து சேரும்.

பெண்கள் அனுசரித்து நடப்பீர்கள். மாணவர்களுக்கு பெற்றோர் ஆதரவாய் இருப்பார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

உடலுழைப்பு அதிகரிக்கும். வருமானம் படிப்படியாக உயரும். பெற்றோருக்கு மருத்துவச் செலவுகள்

குறையும். உத்தியோகஸ்தர்கள், மேலதிகாரிகள் இட்ட வேலைகளைத் திறம்பட முடிப்பீர்கள். வியாபாரிகள் புதிய முதலீடுகளில் ஈடுபடுவீர்கள்.

விவசாயிகள் கையிருப்புப் பொருள்களைத் தக்க வைப்பீர்கள். அரசியல்வாதிகள் உள்கட்சிப் பூசலில் சிக்க மாட்டீர்கள்.

கலைத் துறையினர் கடின முயற்சியில் உன்னத நிலையை அடைவீர்கள். பெண்கள் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். மாணவர்களின் கோரிக்கைகள் நிறைவேறும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

நல்ல பலன்கள் கிடைக்கும். நம்பிக்கை வீண் போகாது. நவீன உபகரணங்களை வாங்குவீர்கள்.

அரசு கௌரவம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் கவனமாக இருப்பீர்கள். வியாபாரிகள் மன உறுதியுடன் செயல்படுவீர்கள்.

விவசாயிகள் நீர்ப்பாசன வசதியைப் பெருக்கிக் கொள்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். கலைத் துறையினர் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள்.

பெண்களுக்கு உறவினர்களுடனான மனக்கசப்புகள் நீங்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

செய்தொழிலை விரிவுபடுத்த முனைவீர்கள். உறவினர்கள் உதவியுடன் செயல்படத் தொடங்குவீர்கள்.

எதிரிகள் தானாகவே விலகுவார்கள். உடல் ஆரோக்கியம், மன வளம் சீராகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு பிரச்னைகள் நீங்கும். வியாபாரிகள் கூட்டாளிகளிடமிருந்து விலகியே இருப்பார்கள். விவசாயிகளுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். கலைத் துறையினர் பழைய ஒப்பந்தங்களை முடித்துகொடுப்பீர்கள். பெண்களுக்கு கணவருடனான ஒற்றுமை அதிகரிக்கும். மாணவர்கள் போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

குடும்பத்தினரிடம் பாராட்டுகள் கிடைக்கும். தரமான பொருள்களை உற்பத்தி செய்வீர்கள். குழப்பங்களைத் தவிர்ப்பீர்கள். யோகா கற்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் பணிகளைச் சுறுசுறுப்புடன் செய்வீர்கள். வியாபாரிகள் புதிய வாகனங்களை வாங்குவீர்கள்.

விவசாயிகள் மாற்றுப் பயிர்களைப் பயிரிடுவீர்கள். அரசியல்வாதிகளைப் பிறர் பாராட்டுவார்கள். கலைத் துறையினர் ஒப்பந்தங்களை விரைந்து முடிப்பீர்கள்.

பெண்கள், கணவர் குடும்பத்தினரிடம் அனுசரித்துச் செல்வீர்கள். மாணவர்கள் ஆன்மிகப் பலத்தைக் கூட்டுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

பொருளாதாரம் சீராகவே இருக்கும். வீண் செலவுகள் ஏற்படாது. புதிய நண்பர்களிடம் உஷாராகப்

பழகுவீர்கள். மூத்தோர் அறிவுரைக்குச் செவி சாய்ப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் அதிகரிக்கும்.

வியாபாரிகள் படிப்படியான முன்னேற்றத்தைக் காண்பீர்கள். விவசாயிகளுக்கு தானிய உற்பத்தி லாபகரமாக இருக்கும்.

அரசியல்வாதிகளின் அந்தஸ்து உயரும். கலைத் துறையினருக்கு நல்ல வருவாய் கிடைக்கும்.

பெண்களுக்கு குடும்பத்தில் மன மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

உயர்பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். பெற்றோருடன் இணக்கமாகப் பழகுவீர்கள்.

தொழிலில் மந்த நிலை நீங்கும். சுபகாரிய எண்ணங்கள் ஈடேறும். உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வு உண்டு. வியாபாரிகள் பயணங்களால் லாபம் அடைவீர்கள்.

விவசாயிகளுக்கு கடன்கள் வசூலாகும். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். கலைத் துறையினர் சக கலைஞர்களிடம் அனுசரணையாக இருப்பீர்கள்.

பெண்களுக்கு உறவினர்களுடனான அன்பு பரஸ்பரம் நீடிக்கும். மாணவர்கள் வெளிநாடு சென்று படிக்கும் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

உடல் உபாதைகள் மறையும். குடும்பத்தில் அமைதி நிலவும். திட்டமிட்ட காரியங்களை முடிப்பீர்கள். குழந்தைகளால் பெருமை உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு உண்டாகும். வியாபாரிகளுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். விவசாயிகளின் தொழில்நுட்பத் திறமை வெளிப்படும்.

அரசியல்வாதிகள் பிறரிடம் ரகசியங்களைப் பகிர வேண்டாம். கலைத் துறையினருக்கு கைநழுவிய ஒப்பந்தங்கள் திரும்பக் கிடைக்கும்.

பெண்கள் பொருளாதார ஏற்றத்தைக் காண்பீர்கள். மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

சந்திராஷ்டமம் - மார்ச் 22, 23, 24.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

குடும்பப் பிரச்னைகள் மறையும். தோற்றப் பொலிவில் மாற்றங்கள் உண்டாகும். குடும்பத்துடன் வெளியூர் செல்வீர்கள்.

ஆன்மிகத்தில் ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு, விருப்பப் பணியிட மாற்றங்கள் உண்டு.

வியாபாரிகளின் நோக்கம் நிறைவேறும். விவசாயிகள் புதிய உபகரணங்களை வாங்குவீர்கள். அரசியல்வாதிகளுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு.

கலைத் துறையினர் பிறரிடம் சகஜமாகப் பழகுவீர்கள். பெண்கள் அலங்காரப் பொருள்களை வாங்குவீர்கள். மாணவர்களுக்கு வெளிநாட்டுத் தொடர்பு பயன் தரும்.

சந்திராஷ்டமம் - மார்ச் 25, 26.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

எதிர்ப்புகளில் வெற்றி பெறுவீர்கள். வருமானம் எதிர்பார்த்த நிலையில் இருக்கும். தொழிலில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். பூர்விகச் சொத்துகளில் வில்லங்கங்கள் நீங்கும்.

உத்தியோகஸ்தர்களின் திறமையை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். வியாபாரிகள் கடன் கொடுக்க வேண்டாம். விவசாயிகள் போட்டிகளைச் சமாளிப்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்குப் பயணங்களால் நன்மை உண்டாகும். கலைத் துறையினருக்கு பிறர் உதவுவார்கள். பெண்கள் விட்டுக் கொடுத்து நடப்பீர்கள்.

மாணவர்கள் நீண்டகாலத் திட்டங்களைத் தீட்டுவீர்கள்.

சந்திராஷ்டமம் - மார்ச் 27, 28.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com