மாரியம்மன் மகிமை!

அங்காளம்மனுக்கு திறந்தவெளியே அவள் விமானம்.
மாரியம்மன் மகிமை!
Published on
Updated on
1 min read

பொள்ளாச்சி நகரின் காவல் தேவதையாக மாரியம்மன் கோயில் உள்ளது. அனைத்து உயிரினங்களையும் கருணை நிறைந்து அல்லும், பகலும் காத்து நின்று அருளாட்சி புரிந்து வரும் உலகநாயகியாக "அன்னை மாரியம்மன்' போற்றப்படுகிறாள்.

முன்பு ஓடுகள் வேய்ந்த ஒரு சிறு கோயிலாக இருந்தது. தற்போது லட்சக்கணக்கான பக்தர்களைத் தன்பால் ஈர்த்துள்ளது.

உயர்ந்த பீடத்தில் வடக்கு நோக்கி அமர்ந்து அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கொடிமரத்தை வணங்கி உள்ளே நுழையும்போது, இடது புறம் விநாயகரையும், வலது புறம் முருகனையும், பெண் காவல் தெய்வங்களையும் காணலாம். கருவறையைச் சுற்றி வலம் வரும்போது உள்ள மண்டபத்தில் அழகிய செப்புப் படிமங்கள் உள்ளன.

கிழக்கு நுழைவாயிலின் வழியாகச் சென்றால், விசாலமான மண்டபத்தை அடையலாம். தொடர்ச்சியாக அங்காள பரமேஸ்வரி அம்மன் அருள்பாலிக்கிறார். இவ்விரு அன்னைகளின் அற்புத இருப்பிடமானதால்தான் இக்கோயிலுக்கு "அருள்மிகு மாரியம்மன் அங்காளம்மன் கோயில்' எனப் பெயர் பெற்றது.

அங்காளம்மனுக்கு திறந்தவெளியே அவள் விமானம். திருப்பணியின்போது விமானம் எழுப்ப உத்தரவு கேட்டபோது, அன்னையின் அனுமதி கிடைக்கவில்லையாம். அதாவது அன்னையின் விண்முட்டி நிற்கும் அருளாட்சியை கட்டுக்குள் கொண்டுவருவதை அவள் விரும்பவில்லை என்பது தெளிவாகிறது.

சிறப்புமிக்க இந்தக் கோயிலின் மாசிப் பெருந்திருவிழா தற்போது நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வுகள்: பிப். 28} வெளிப் பூவோடு ஆரம்பம், மார்ச் 1} கொடி கட்டுதல், 2}பூவோடு, 3}ஆயக்கால் போடுதல், 4}மகுடம் வைத்தல், 5}மாவிளக்கு, திருக்கல்யாண உற்சவம், தேரோட்டம், 6}இரண்டாம் நாள் தேரோட்டம், 7}தேரோட்டம், பாரி வேட்டை, தெப்பத் தேர், 8}அம்மன் மஞ்சள் நீராடுதல், கம்பம் எடுத்தல், 10 - மகா அபிஷேகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com