அம்மன்குறிச்சி என்ற சிற்றூரில் வாழ்ந்த இடையாத்தி சாத்தன்குருத்தி என்பவர் பொன்னம்மாள் என்ற ஊரணியை வெட்டியுள்ளார். 8. 9}ஆம் நூற்றாண்டுகளில் இருந்த புறமலை நாடு, ஒலியமங்கலம் நாடுகளுக்கு இடையே இந்த ஊர் உள்ளது. மதுரை ஆட்சிக்குள்பட்டிருந்த 72 பாளையங்களுக்குள் மருங்காபுரி பாளையமும் ஒன்று.
இங்குள்ள கோயில் முன் மண்டபத்தில் உள்ள தூண் கல்வெட்டில், "வீரபூச்சி நாயக்கர் என்பவர் 1691}இல் அம்மன்குறிச்சியைத் தலைநகரமாகக் கொண்டு மருங்காபுரிபாளையத்தை ஆண்டு வந்துள்ளார்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது, இவ்வூர் "நமன்குறிச்சி' என்று பெயருடன் வழங்கப்பட்டுள்ளது. இங்குள்ள சீரங்கன்பட்டி, மாதன்பட்டி, திரணிப்பட்டி, பள்ளக்கோடங்கிப்பட்டி, மடத்துப்பட்டி முதலான கிராமங்களைக் கோயிலுக்குத் தானமாக கொடுத்துள்ளார். இந்த ஊர்ப் பெயர்களில் காலப்போக்கில் மாற்றம் கண்டுள்ளன. 17}ஆம் நூற்றாண்டில் நாயக்கர்கள் மேலாண்மையில் இவ்வூர் சிறப்பு பெற்றுள்ளது.
பூச்சி நாயக்கர் என்பவர் ஆட்சி புரிந்தபோது, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலை தரிசனம் செய்ய புறப்பட்டார். அப்போது, ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், கோயிலுக்குச் செல்ல முடியாமல் அவர் மனம் வருந்தினார். இரவு திடீரென்று மீனாட்சி சுந்தரேஸ்வரர், பூச்சி நாயக்கருக்கு காட்சிக் கொடுத்து தனக்காக அவர் இருக்கும் இடத்தில் கோயில் எழுப்பும்படியும் கூறியுள்ளனர். இதன்படி, அவர் கோயில் கட்டியுள்ளார்.
நாயக்கர் கலைப்பாணியில் கோயில் அமைந்துள்ளது. மீனாட்சி அம்மன்}சுந்தரேஸ்வரர் இரண்டு சந்நிதிக்கும் பொதுவாக அமைந்த அந்தராள மண்டபத் தூண்களில் நாயக்க மன்னர்களின் சிலைகள் தலையில் முண்டாசும், கைகள் இறைவன்}இறைவியைக் கூப்பிய வண்ணமும் வடிமைக்கப்பட்டுள்ளது.
சிவன் லிங்கத் திருமேனியாக ஆவுடையார் கொண்ட அமைப்புடன் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். புதுக்கோட்டை, பொன்னமராவதி, திருமயம் ஆகிய ஊர்களில் இருந்து அம்மன்குறிச்சிக்குச் செல்லலாம்.
} பொ.ஜெயச்சந்திரன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.