நூறு ஆண்டுகளுக்கு முன்பு பனப்பாக்கம் கிராம எல்லையில், ஏரிக்கரையோரமாக மண்ணில் புதைந்திருந்தது சுவாமி சிலை. அந்த வழியாக நடந்து சென்ற சரோஜா என்ற இளம்பெண் தற்செயலாகப் பார்த்தார். உடனே அவர் அருகில் சென்றபோது, சேறு படிந்தவாறு கருங்கல்லில் வடிவமைக்கப்பட்ட அம்மன் சிலை என்பதை அறிந்து மெய்சிலிர்த்துப் போனார். சிலையை வெளியே எடுத்த சரோஜா, மண் சேற்றைத் துடைத்து சுத்தம் செய்தார். பின்னர், அம்மன் சிலையை அதே இடத்தில் பத்திரமாக வைத்து விட்டு, வீடு வந்து சேர்ந்தார் சரோஜா.
இரவு முழுவதும் அம்மன் நினைவே சரோஜாவுக்கு இருந்து, தூக்கம் வராமல் தவித்தார். மறுநாள் சரோஜா குடத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு போய் அம்மன் சிலையை சுத்தம் செய்து, பூவை வைத்து வணங்கி விட்டு திரும்பினார். பின்னர், அவர் அவ்வப்போது வழிபட்டு வந்தார்.
ஒரு நாள் ஏரிக்கரை மீது சரக்கு லாரி மணலில் புதைந்து போய் நின்றது. ஓட்டுநர் எவ்வளவோ முயன்றும் சக்கரம் மணலில் சிக்கிச் சுழன்றதே தவிர, லாரியை கிளப்பி எடுத்துச் செல்ல முடியவில்லை. ஓட்டுநரும் களைத்துப் போய் நின்றிருந்தார். அப்போது அம்மன் சிலைக்கு வழிபாடு நடத்த குடத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்த சரோஜாவிடம் ஓட்டுநர், குடிக்கத் தண்ணீர் கேட்டார். "ஆள் நடமாட்டம் இல்லையே .. எப்படி லாரியை எடுக்கப் போகிறாரோ இந்த மனுஷன்' என்று மனதில் நினைத்துக்கொண்ட சரோஜா, ""தண்ணீர் போதுமா?'' என்று கேட்டார். தண்ணீர் குடித்த ஓட்டுநரும் சரோஜாவிடம், ""குடத்தில் தண்ணீரை எங்கேம்மா எடுத்துட்டு போறே?'' என்று கேட்டார். அம்மன் சிலையைக் காட்டிய சரோஜா , ""அம்மனை வழிபடப் போகிறேன்'' என்றார். உடனே ஓட்டுநரும் வந்து வழிபட்டுள்ளார்.
மறுநாள் காலையில் சரோஜா தாம்பரம் செல்ல ஏரிக்கரையில் நடந்து செல்லும் மண்ணில் புதைந்து நின்ற லாரியை காணவில்லை. ஆனால், அம்மன் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, ஓட்டுநர் சிலரோடு நின்றுகொண்டிருந்தார். அப்போது சரோஜாவிடம் ஓட்டுநர், ""நீங்க அம்மனை கும்பிட்டு விட்டு போன சிறிது நேரத்தில் மாட்டுவண்டி நிறைய ஏழெட்டு ஆளுங்க இந்த வழியாக வந்தார்கள்.
ஒரகடத்தைத் தாண்டி ஏதோ ஊர் பெயரைச் சொன்னார்கள். கடப்பாரை, மண்வெட்டியெல்லாம் கொண்டு வந்த அவர்கள், உதவி செய்தார்கள். அவர்கள் செல்லும்போது, செலவுக்கு பணம் கொடுத்தேன்.வேண்டாம்னு கிளம்பி போய்ட்டாங்க? அம்மனே என் கஷ்டத்தைப் பார்த்து மனம் இறங்கி லாரியை வெளியே எடுக்க ஆள்களை அனுப்பி இருக்கான்னு லாரி உரிமையாளரிடம் சொன்னதும் அவரும் என்னோட இங்கே சாமி கும்பிட வந்துட்டாரு?'' என்றார். உடனே லாரி உரிமையாளரும் சரோஜாவிடம், ""நீங்க சொன்னால் அம்மனுக்கு கோயில் கட்டுகிறேன்'' என்றார்.
இதன்பின்னர், ஏரிக்கரைக்கு கிழக்கில் சாலையோரமாக பொன்னியம்மனுக்கு கோயில் எழுப்பப்பட்டது .
"பிரச்னைகள், சோதனைகளையெல்லாம் தீர்த்து வைப்பாள்' என தன்னை நம்பிக்கையுடன் நாடி வந்து வணங்கும் பக்தர்களுக்கு அருள்பாலித்து, கிராமத் தெய்வமாக இருக்கிறார் பனப்பாக்கம் பொன்னியம்மன்.
வெள்ளிக்கிழமைகள், செவ்வாய்க்கிழமைகளில் விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஆடி மாதத்தில் கோயில் விழாக்கோலம்தான். காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உள்பட்ட படப்பை அருகே பனப்பாக்கத்தில் இந்தக் கோயில் உள்ளது.
தாம்பரம் மனோபாரதி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தொடக்கம்

துறையூா் - அதிமுகவுடன் மோதும் காங்கிரஸ்!

புள்ளிகள்

உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா? இறக்குமதி செய்யப்பட்டவர்கள் வேண்டுமா? வேலுமணி பிரசாரம்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

