பழங்காலத்தில் கோட்டைகள் அல்லது பெரிய மதில் சுவர்களில் அவசர தேவைகளுக்காகவும், காவலர்கள் கண்காணிப்பதற்காகவும் வைக்கப்படும் சிறிய கதவு/துவாரத்துக்கு "திட்டி வாசல்' என்று பெயர்.
ஸ்ரீரங்கம் கோயிலின் தெற்குப் பகுதி பாதுகாப்பு எல்லையையொட்டி அமைந்ததால், அங்கு கோயில் கொண்ட அஞ்சனை மைந்தனுக்கு "திட்டி ஆஞ்சநேயர்' என்ற பெயர் நிலைத்தது.
விஜயநகரப் பேரரசு காலத்தின்போது, அரச குரு ஸ்ரீவியாஸராஜ தீர்த்தர் இந்தச் சிலையை பிரதிஷ்டை செய்ததாகக் கூறப்படுகிறது.
ராகு, கேது மற்றும் சனி தோஷங்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் சனிக்கிழமைகளில் இங்கு வந்து வெற்றிலை மாலை மற்றும்
எலுமிச்சை மாலை சாற்றி வழிபடுகிறார்கள்.
ரங்கநாதர் கோயில் வீதி உலாக்களின்போது, இப்பகுதி வழியாகச் செல்லும் முக்கிய உற்சவர்கள் திட்டி ஆஞ்சநேயரின் வாசலில் நின்று சிறப்பு உபய மரியாதைகளைப் பெற்றுக் கொள்வது இன்றும் தொடர்கிறது.
ஸ்ரீரங்கம் தெற்கு சித்திரை வீதியில் இருந்து மேற்கு நோக்கிச் செல்லும் வடம்போக்கி
சந்தில் அமைந்துள்ள இந்தக் கோயில் விமான ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மஹா சம்ப்ரோக்ஷணம் ஆகஸ்ட் 19 (புதன்கிழமை) காலை 9.15 மணிக்கு மேல் 10 மணிக்குள் நடைபெற உள்ளது.
- ஆர்.வேல்முருகன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தஞ்சையில் சீரமைக்கப்பட்ட புத்தாயிரம் பூங்கா திறப்பு

அமித் ஷா உரையின்போது வெயில் தாங்காமல் மயங்கி விழுந்த காவலர்கள்! | Pondicherry

தாழைக் கருப்பசாமி கோயிலில் பெரிய களரித் திருவிழா

தஞ்சாவூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆய்வு
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



