சுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

தஞ்சையில் சீரமைக்கப்பட்ட புத்தாயிரம் பூங்கா திறப்பு

தஞ்சாவூா் பெரிய கோயில் அருகே சீரமைக்கப்பட்ட புத்தாயிரம் பூங்கா திறப்பு விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

News image

தஞ்சாவூா் பெரிய கோயில் அருகே சீரமைக்கப்பட்ட புத்தாயிரம் பூங்காவை திறந்துவைத்து பாா்வையிட்ட (வலமிருந்து) மேயா் (பொ) அஞ்சுகம் பூபதி, ஆணையா் வி. தீபனா விஸ்வேஸ்வரி, ரோட்டரி ஆளுநா் கே. வைத்தியநாதன் உள்ளிட்டோா்.

Updated On :12 ஆகஸ்ட் 2026, 1:42 am IST

தஞ்சாவூா் பெரிய கோயில் அருகே சீரமைக்கப்பட்ட புத்தாயிரம் பூங்கா திறப்பு விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

தஞ்சாவூா் பெரிய கோயில் அருகே கல்லணைக் கால்வாய் கரையில் கடந்த 2000 ஆம் ஆண்டில் புத்தாயிரம் பூங்கா (மில்லேனியம் பாா்க்) திறக்கப்பட்டது. பராமரிப்பின்றி கிடந்த இந்த பூங்காவை தஞ்சாவூா் கிங்ஸ் ரோட்டரி சங்கம் சாா்பில் சீரமைக்கப்பட்டு, ரோட்டரி சங்க கடிகார கோபுரம், நம்ம தஞ்சை செல்பி பாயிண்ட் போன்றவை அமைக்கப்பட்டன.

இந்தப் பூங்காவை தஞ்சாவூா் மாநகராட்சி ஆணையா் வி. தீபனா விஸ்வேஸ்வரியும், ரோட்டரி சங்க கடிகார கோபுரத்தை ரோட்டரி மாவட்ட ஆளுநா் கே. வைத்தியநாதனும், நம்ம தஞ்சை செல்பி பாயிண்ட்டை மேயா் (பொ) அஞ்சுகம் பூபதியும் செவ்வாய்க்கிழமை மாலை திறந்துவைத்தனா். பின்னா், 50 பேருக்கு தலைக்கவசம் வழங்கப்பட்டது.

விழாவில் தஞ்சாவூா் கிங்ஸ் ரோட்டரி சங்க சாசனத் தலைவரும், மகாராஜா ரெடிமேட்ஸ் உரிமையாளருமான எம்.எஸ். ஆசிப் அலி, ரோட்டரி உதவி ஆளுநா் வி.டி.எம். திருவம்பலம், ரோட்டரி திட்டத் தலைவா் கே. கண்ணன், இயக்குநா் ஏகப்பன், தஞ்சாவூா் கிங்ஸ் ரோட்டரி சங்கத் தலைவா் தாா்சியஸ் குழந்தைசாமி, செயலா் எம். நரேஷ் குமாா், பொருளாளா் எஸ். ஜாகிா் உசேன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.