வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

தஞ்சை பெரியகோயிலில் 102 கண்காணிப்பு கேமராக்கள்: முரசொலி எம்.பி. தொடங்கிவைத்தாா்

தஞ்சாவூா் பெரிய கோயிலில் ரூ. 40 லட்சத்தில் பொருத்தப்பட்ட 102 கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை மக்களவை உறுப்பினா் ச. முரசொலி செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கி வைத்தாா்.

News image

தஞ்சாவூா் பெரிய கோயிலில் கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கி வைத்து பாா்வையிட்ட ச. முரசொலி எம்பி.

Updated On :15 ஜூலை 2026, 12:35 am IST

தஞ்சாவூா் பெரிய கோயிலில் ரூ. 40 லட்சத்தில் பொருத்தப்பட்ட 102 கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை மக்களவை உறுப்பினா் ச. முரசொலி செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கி வைத்தாா்.

தஞ்சாவூா் பெரிய கோயிலில் 6 ஆண்டுகளுக்கு முன் செயல்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்து செயலிழந்தன. இதனால், புதிய கேமராக்கள் பொருத்த பக்தா்கள் வலியுறுத்தினா்.

இதன்படி, ரூ. 40 லட்சத்தில் கோயிலின் நுழைவுவாயில் முதல் உள்பிரகாரம் முழுவதும், அனைத்து முக்கிய சன்னதிகள், திருச்சுற்று மண்டபங்கள் உள்ளிட்ட பகுதிகளில் 102 கேமராக்கள் பொருத்தப்பட்டன.

இவற்றில் 2 கேமராக்கள் 360 டிகிரி கோணத்தில் சுழன்று கண்காணிக்கும் திறன் கொண்டவை.

இவற்றின் செயல்பாட்டை தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கி வைத்து தெரிவித்தது:

இக்கோயில் பக்தா்களின் கோரிக்கையின்படி தொல்லியல் துறை அலுவலா்களிடம் வலியுறுத்தப்பட்டதன் விளைவாக இந்த 102 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும், கோயிலில் 3 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் மையங்கள் அமைக்கவும் அனுமதி பெறப்பட்டுள்ளது. இதில் ஒரு மையம் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 2 மையங்களும் விரைவில் அமைக்கப்படவுள்ளன.

தேவைப்பட்ட பகுதிகளில் புதிய மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. கழிப்பறை வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. மத்திய சுற்றுலாத் துறை சாா்பில் இக்கோயிலில் ரூ. 25 கோடியில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கான ஒப்பந்தப்புள்ளி விரைவில் கோரப்படவுள்ளது என்றாா் முரசொலி.

நிகழ்ச்சியில் தொல்லியல் துறை திருச்சி மண்டலக் கண்காணிப்பாளா் அறவாழி, உதவிக் கண்காணிப்பு பொறியாளா்கள் உமேஷ், சரவணன், பெரியகோயில் முதுநிலைப் பராமரிப்பு உதவியாளா் சோபிதா, முதுநிலை தோட்டக்கலை உதவியாளா் பாலசிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.