வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!கரூரில் உதவியது யார்? ஓடியது யார்? - முதல்வர் விஜய் பேச்சுக்கு கனிமொழி கண்டனம்!கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு நினைவுச் சின்னம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எப்போது? முதல்வர் விஜய் தகவல்தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதிகட்சி நிதி என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஒரே ஓட்டம்! முதல்வர் விஜய்
/

சென்னை சேப்பாக்கத்தில் பிக்பாஷ் லீக்கின் முதல் போட்டி: அதிகாரபூர்வ அறிவிப்பு!

பிக் பாஷ் லீக்கின் தொடக்கப் போட்டி இந்தியாவில் நடைபெறும் என ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானீஸ் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

News image

மெல்பர்ன் திடலில் ஆஸ்திரேலிய பிரதமர் அல்பனிஸ், விக்டோரியா முதல்வர் ஜசிந்தா ஆலனுடன் பிரதமர் மோடி.

Updated On :10 ஜூலை 2026, 4:04 pm IST

பிக் பாஷ் லீக்கின் தொடக்கப் போட்டி இந்தியாவில் நடைபெறும் என ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானீஸ் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கிரிக்கெட்டுக்கான ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஐபிஎல், சர்வதேச போட்டிகள், மாநில பிரீமியர் லீக் தொடர்கள் என லீக் தொடர்களும் அதிகரித்திருக்கின்றன. இந்தியா மட்டுமின்றி, உலகமெங்கிலும் நடக்கும் கிரிக்கெட் தொடர்களுக்கு இந்திய ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைக்கின்றன. இதனால், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் இந்தியாவில் கிரிக்கெட் போட்டியை நடத்துவதை விருப்பமாகக் கொண்டுள்ளனர்.

சமீபத்தில், இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைத் தொடருக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக, சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், கனடா ஆகிய அணிகள் விளையாடிய போட்டிகளுக்கு, வேலை நாள்களிலும் கிரிக்கெட் ரசிகர்கள் அதிகளவில் திரண்டு ஆரவாரப்படுத்தியிருந்தனர்.

இந்த நிலையில், இந்​தோ​னேசி​யா, ஆஸ்​திரேலி​யா, நியூசிலாந்து ஆகிய நாடு​களில் பிரதமர் மோடி அரசு​முறைப் பயணம் மேற்​கொண்​டுள்​ளார். இந்​தோ​னேசி​யப் பயணத்தை முடித்​துக்​கொண்டு, கடந்த ஜூலை 8-ஆம் தேதி ஆஸ்​திரேலியா வந்​தடைந்​தார். மெல்​பர்​னில் பிரதமர் அந்​தோனி அல்​பனீஸ், கவர்​னர் ஜெனரல் சாம் மோஸ்​டின் உள்​ளிட்​டோரை சந்​தித்​துப் பேசி​னார்.

தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். மூன்று நாள் பயணமாக ஆஸ்திரேலியா சென்ற பிரதமர் மோடி, மூன்றாவது நாளான இன்று (ஜூலை 10) பிரதமர் அந்​தோனி அல்பனீஸுடன் மெல்பர்ன் திடலுக்குச் சென்றிருந்தார். அங்கு ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக்கையும் சந்தித்தார்.

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற டி20 கிரிக்கெட் தொடரான 'பிக் பாஷ் லீக்' வரலாற்றில் முதல்முறையாக இந்திய மண்ணில் நடத்தப்பட்டும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானீஸ் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெறும் இந்தப் போட்டியை ஆஸ்திரேலிய அரசு மற்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா இணைந்து நடத்துகின்றன.

2026-2027 ஆம் ஆண்டுக்கான சீசனின் முதல் போட்டியை சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் திடலில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) அனுமதியளித்துள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தில் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சென்னையில் தொடரை நடத்துவதற்கு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன. ஆனால், பிசிசிஐ இதற்குச் சம்மதிக்கவில்லை. பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெறுவதாகவும், இந்தியாவுடன் உறவை மேம்படுத்த இப்போட்டியை சென்னையில் நடத்த திட்டமிட்டு வருவதாகவும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தகவல் தெரிவித்தனர்.

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் போலவே, 2011 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் லீக் தொடர் அறிமுகம் செய்யப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பிக்பாஷ் லீக்கின் 16-வது தொடரின் தொடக்க போட்டியில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் மற்றும் சிட்னி சிக்சர்ஸ் அணிகள் மோத உள்ளன.

இந்தப் போட்டி டிசம்பர் மாதம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், சென்னையில் டிசம்பர் மாதம் பருவமழை கடுமையாக இருக்கும் என்பதால், வானிலை ஒரு பெரிய சவாலாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. இதையும் கருத்தில் கொண்டு போட்டியை முன்கூட்டிய நடத்த வேண்டும் என்று ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

Summary

Australia's Big Bash League (BBL) will begin its 2026-27 season in India, with the opening match set to be played in Chennai in December, Australian Prime Minister Anthony Albanese announced on Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.