
தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஜன. 9 - 15) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.
தொழிலில் ஆதாயங்களைப் பெறுவீர்கள். புறம் பேசுபவர்களை இனம் கண்டு ஒதுக்கிவிடுவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு பிரச்னைகள் குறையும். வியாபாரிகளுக்கு அரசாங்கத்திலிருந்து சில நன்மைகள் கிடைக்கும். விவசாயிகளுக்கு சக விவசாயிகள் தங்களாலான உதவிகளைச் செய்வார்கள்.
அரசியல்வாதிகள் தங்களின் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். கலைத்துறையினர் உற்சாகமாக திறமைகளை வளர்த்துக்கொள்வீர்கள். பெண்கள் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். மாணவர்கள் நன்றாக உழைத்துப் படிப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - ஜனவரி 14, 15.
அலைச்சல் தரும் வேலைகளைக் குறைத்துக் கொள்வீர்கள். தாமதமான காரியங்கள் விரைவாக நடக்கத் தொடங்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு பொருளாதாரம் சீராக இருக்கும். வியாபாரிகளுக்கு எதிரிகள் அடங்கி நடப்பார்கள். விவசாயிகள் நல்ல மழை பொழிவால் வறண்டு கிடந்த நிலங்களிலும் பயிர் செய்வார்கள்.
அரசியல்வாதிகள் பொதுச் சேவையில் சிறப்பாக ஈடுபடுவீர்கள். கலைத்துறையினர் தன்னம்பிக்கையுடன் பணியாற்றுவீர்கள். பெண்கள் உற்றார், உறவினர்களை அரவணைத்துச் செல்வீர்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
உடல்நலத்தில் சிறிது குறை ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். குடும்பக் கடமைகளைப் பொறுப்புடன் சுமப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்களிடம் மேலதிகாரிகள் நட்புடன் நடந்து கொள்வார்கள். வியாபாரிகள் வியாபாரத்தை நல்ல முறையில் நடத்துவீர்கள். விவசாயிகள் புதிய யுத்திகளைப் புகுத்தி பயிர் செய்வீர்கள்.
அரசியல்வாதிகள் கட்சி மேலிடம் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். கலைத்துறையினருக்கு சில ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். பெண்களுக்கு கணவருடனான ஒற்றுமை சிறப்பாகத் தொடரும். மாணவர்கள் யோகா, தியானம் போன்றவற்றைச் செய்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தொழிலில் சீரான நிலையைக் காண்பீர்கள். முக்கிய விஷயங்களைப் பேசும் போது எச்சரிக்கையுடன் இருப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளைத் திட்டமிட்டது போல் முடிப்பீர்கள். வியாபாரிகள் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகள் சுறுசுறுப்பாக விவசாயப் பணியாற்றுவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு அரசு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கலைத்துறையினர் ரசிகர் மன்றங்களுக்கும் செலவு செய்வீர்கள். பெண்களுக்கு உடலும் மனமும் பலப்படும். மாணவர்கள் விளையாட்டுகளில் ஈடுபட்டு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
உங்கள் வேலைகளை தேர்வு செய்து செய்வீர்கள். அனைவரிடமும் விட்டுக் கொடுத்து நடந்துகொள்வீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளுடன் சகஜமாகப் பழகுவீர்கள். விவசாயிகளுக்கு பழைய குத்தகைப் பாக்கிகள் வசூலாகும்.
அரசியல்வாதிகள் தொண்டர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். கலைத்துறையினர் கவனமாக உழைப்பீர்கள். பெண்கள் இல்லத்துக்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆதரவு தொடர்ந்து கிடைக்கும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
குடும்பத்தினரிடம் கனிவாகப் பேசுவீர்கள். வருமானம் சீராகவே இருக்கும்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளை உடனடியாக செய்து முடித்து விடுவீர்கள். வியாபாரிகளுக்கு பயணங்களால் பணவரவு உண்டாகும். விவசாயிகள் அதிக மகசூலைக் காண்பீர்கள்.
அரசியல்வாதிகள் கட்சி மேலிடம் கொடுத்த வேலைகளைச் சரிவர செய்து முடித்துவிடுவீர்கள். கலைத்துறையினர் விழிப்புடனிருந்து ஒப்பந்தங்களை நிறைவேற்றுவீர்கள். பெண்கள் கணவருடன் ஒற்றுமையுடன் பழகுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் கூடத்தொடங்கும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். தொழிலைச் சிறப்பாக நடத்துவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். வியாபாரிகளின் வேலைப்பளுவை கூட்டாளிகள் குறைப்பார்கள். விவசாயிகளின் பொருள்களுக்கு சந்தையில் மதிப்பு அதிகரிக்கும்.
அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் உத்தரவை மீறி எதுவும் செய்யமாட்டீர்கள். கலைத்துறையினர் சக கலைஞர்களின் அலட்சிய போக்கைப் பொருட்படுத்த மாட்டீர்கள். பெண்கள் குடும்பத்தில் சந்தோஷம் நிறையக் காண்பீர்கள். மாணவர்கள் முதல் மாணவராக வர முயற்சி செய்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எவருக்கும் கடன் கொடுப்பதோ, முன் ஜாமீன் போடுவதோ கூடாது.
உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகள் சாதகமாக இருப்பார்கள். வியாபாரிகள் புதிய முயற்சிகளை வெற்றிகரமாக முடித்து விடுவீர்கள். விவசாயிகளுக்கு பயிர்களில் பூச்சிகளின் தொல்லை எதுவுமே ஏற்படாது.
அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். கலைத்துறையினர் வளர்ச்சியைக் காண்பீர்கள். பெண்களின் உடல் ஆரோக்கியம், மனவளம் இரண்டும் மேம்படும். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபடுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
சுபகாரிய முயற்சிகள் கைகூடும். மனதுக்கினிய பயணங்களை மேற்கொள்வீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு நெடுநாளைய கோரிக்கை ஒன்று நிறைவேறும். வியாபாரிகள் மனதில் சமநிலையோடு இருப்பீர்கள். விவசாயிகள் விவசாய உப தொழில்களில் ஈடுபடுவீர்கள்.
அரசியல்வாதிகள் மாற்றுக் கட்சியினரின் நடவடிக்கைகளையும் கண்காணிப்பீர்கள். கலைத்துறையினர் ரசிகர்களிடம் எதையும் வெளிப்படையாகப் பேச வேண்டாம். பெண்கள் குடும்பத்தினரின் மனம் கோணாமல் நடந்து கொள்வீர்கள். மாணவர்களுக்கு ஆசிரியர்களும் பெற்றோரும் பக்க பலமாக இருப்பார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
பொருளாதாரம் சீராகவே தொடரும். பழைய கடன்களை அடைத்துவிடுவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் அனைத்தும் சுமுகமாக முடியும். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் சிறப்பைக் காண்பீர்கள். விவசாயிகளுக்கு கொள்முதல் லாபம் அதிகரிக்கும்.
அரசியல்வாதிகள் அனைத்து வேலைகளையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினரின் தனித்தன்மை வெளிப்படும். பெண்கள் இல்லத்தில் மகிழ்ச்சியைக் காண்பீர்கள்.
மாணவர்கள் சோம்பேறித்தனத்தை மூட்டைக் கட்டி வைத்துவிட்டு நன்றாகப் படிப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
முக்கிய முடிவை சரியாக எடுப்பீர்கள். இக்கட்டான தருணங்களில் உங்கள் சமயோஜித புத்தி கை கொடுக்கும்.
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் சுமுகமாகப் பழகுவீர்கள். வியாபாரிகள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பீர்கள். விவசாயிகளின் விளைப்பொருள்களுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு கட்சியில் மதிப்பு, மரியாதைகள் அதிகரிக்கும். கலைத்துறையினரின் படைப்புகள் மக்களிடம் சரியான முறையில் சென்றடையும். பெண்களுக்கு சுபகாரியங்கள் நடக்கும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களை அள்ளுவீர்கள்.
சந்திராஷ்டமம் - ஜனவரி 9, 10.
உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களின் குறைகளைத் தீர்ப்பீர்கள். உற்றார் உறவினர்கள் நண்பர்களுடன் விசுவாசமாகப் பழகுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் வேலைகளைக் குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்து விடுவீர்கள். வியாபாரிகளுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். விவசாயிகள் மேலும் வருமானத்தைப் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகள் எதிர்க்கட்சியினருடன் எச்சரிக்கையாகப் பழகுவீர்கள். கலைத்துறையினர் பாராட்டுகளையும் பரிசுகளையும் பெறுவீர்கள். பெண்களுக்கு மழலைப் பாக்கியம் உண்டாகும். மாணவர்கள் பெற்றோருக்கு பெருமை சேர்ப்பீர்கள்.
சந்திராஷ்டமம் . ஜனவரி 11, 12, 13.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.