கிழக்கு தைமூர் நாட்டில் இருந்து ஐ.நா. அமைதிப்படை திங்கள்கிழமை முழுமையாகத் திரும்பப் பெறப்பட்டது.
கிழக்கு தைமூரில் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து ஐ.நா. அமைதிப்படை படிப்படியாக திரும்பப் பெறப்பட்டது. இறுதிக்கட்டமாக 2012ஆம் ஆண்டின் இறுதிநாளான திங்கள் கிழமை 1,500 அமைதிப்படை வீரர்கள் தைமூரில் இருந்து விடை பெற்றனர். "தைமூர் மக்களும், அதன் தலைவர்களும் இனிவரும் சவால்களை எதிர்கொள்ளத் தயாராக உள்ளனர். நாட்டின் பாதுகாப்புக்கு உள்நாட்டு போலீஸôர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். இதையடுத்து, ஐ.நா. அமைதிப்படை திரும்பப் பெறப்பட்டுள்ளது' என்று தைமூருக்கான ஐ.நா. ஒருங்கிணைந்த திட்ட (யுஎன்எம்ஐடி) தலைவர் ஃபின் ரெஸ்கே நீல்சன் தெரிவித்தார்.
தென்கிழக்காசியக் கடலின் தென் பகுதியில் தைமூர் தீவு அமைந்துள்ளது. கிழக்கு தைமூர் தனி நாடாகவும், மேற்கு தைமூர் இந்தோனேசியாவின் ஒரு மாகாணமாகவும் அமைந்துள்ளன.
24 ஆண்டுகளாக இந்தோனேசியாவின் ஆதிக்கத்தில் இருந்த கிழக்கு தைமூர், ஐ.நா. தலையீட்டால் பொது வாக்கெடுப்பு மூலம் 1999ஆம் ஆண்டு தனி நாடாக அறிவிக்கப்பட்டது. போர், வறுமை, நோய் உள்ளிட்டவற்றால் அக்காலகட்டத்தில் 1 லட்சத்து 83 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!

பாரதிராஜா மறைவு! செய்திகள் நேரலை

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்வு! ஐடி, பார்மா பங்குகள் லாபம்!

ராஜபாளையம் அருகே கூலித் தொழிலாளி வெட்டி படுகொலை: போலீஸார் விசாரணை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


