அமெரிக்காவில் இந்தியர் ஒருவர், அவருடைய கடையில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இது குறித்து அமெரிக்க போலீஸார் தெரிவித்துள்ள விவரம்: இந்தியாவின் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் வெங்கட் ரெட்டி (47). இவர் அமெரிக்காவின் ஓஹியோ பகுதியில் மதுபான கடை ஒன்றை நடத்தி வந்தார்.
கடந்த சனிக்கிழமை அவர் வீடு திரும்பாததால் அவருடைய மனைவி ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கடைக்குச் சென்று பார்த்திருக்கிறார். அங்கு அவருடைய கணவர் காயங்களுடன் இறந்து கிடந்தார்.
இது குறித்து அவர் போலீஸூக்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் அவருடைய உடலை பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ""உயிரிழந்த வெங்கட் ரெட்டியின் உடலில் பலத்த காயங்கள் இருந்ததால் அவரை யாரோ சிலர் தாக்கிக் கொன்றிருக்கக் கூடும் எனக் கருதுகிறோம்.
குற்றவாளிகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது'' என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இனி அண்ணாமலை vs விஜய்! பாஜகவிலிருந்து அமர் பிரசாத் ரெட்டி விலகல்!

பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!

புதுச்சேரி தொழிலதிபரிடம் ரூ.1.27 கோடி மோசடி: 3 பேர் கைது!

மகன் மனோஜ்! பாரதிராஜாவின் நிறைவேறாத ஒரே ஆசை!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


