தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

வடகொரியாவில் புதிய பிரதமர் நியமனம்

வடகொரியாவின் புதிய பிரதமராக பாக் பாங்-ஜூ (74) நியமிக்கப்பட்டுள்ளார்.

News image
Updated On :2 ஏப்ரல் 2013, 12:24 am IST

வடகொரியாவின் புதிய பிரதமராக பாக் பாங்-ஜூ (74) நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்கொரியா, அமெரிக்காவுடன் போர் நடத்த ஆயத்தமாகி வரும் சூழ்நிலையில், வடகொரியாவில் இந்த திடீர் நியமனம் நடந்துள்ளது. வடகொரியாவில் அதிபர் கிம் ஜோங் உன் அனைத்து அதிகாரத்தையும் வைத்துள்ளார்.

பிரதமர் பதவி, நாடாளுமன்றம் உள்ளிட்டவை அங்கு பெயரளவில்தான் செயல்பட்டு வருகின்றன. இப்போது பிரதமராக இருந்த சோய் யாங்-ரிம் பதவி நீக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக 2003-07-ம் ஆண்டு வரை பாக் பாங்-ஜூ பிரதமராக இருந்தார். அப்போது அவர் மேற்கொண்ட சில பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் கட்சியிலும், ராணுவத்திலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. எனவே அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

திங்கள்கிழமை கூடிய வடகொரிய நாடாளுமன்றத்தின் முன்னிலையில் பாக் பாங்-ஜூ பதவியேற்றார். வடகொரியாவை அணுஆயுத நாடு என்று அவசர சட்டமும் கொண்டு வரப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.