பிரபலமான விடியோ இணையதளமான யூ டியூப் ஏப்ரல் 1-ஆம் தேதி தனது ரசிகர்கள் பலரை முட்டாளாக்கியது.
யூ டியூப் இணையதளத்தில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 31) அந்நிறுவனத்தினரால் ஒரு விடியோ வெளியிடப்பட்டிருந்தது. அதில், உலகின் சிறந்த விடியோ எது என்பதைக் கண்டறிவதற்காக 2005-ஆம் ஆண்டில் யூ டியூப் தொடங்கப்பட்டது. இணையதள ரசிகர்களின் ஆதரவுடன் கோடிக் கணக்கான விடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன. இவை அனைத்தையும் பரிசீலித்து சிறந்த விடியோ எது என்பதை 2023-ஆம் ஆண்டில் அறிவிக்க இருக்கிறோம். எனவே ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் யூ டியூப் செயல்படாது. அதில் எந்த விடியோவையும் பதிவேற்றம் செய்ய முடியாது. பதிவேற்றம் செய்யப்பட்ட விடியோக்களும் அழிக்கப்பட இருக்கிறது என்று கூறப்பட்டிருந்தது. இது யூ டியூப்பின் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது.
ஆனால் ஏப்ரல் 1-ம் தேதி யூ டியூப் வழக்கம் போல செயல்பாட்டில் இருந்தது. இதன் பின்னர்தான் ரசிகர்களை யூ டியூப் இணையதளம் முட்டாளாக்கியுள்ளது தெரியவந்தது. இதேபோல டுவிட்டர் இணையதளமும் ரசிகர்களை ஏமாற்றி ரசித்தது. உயிரெழுத்துகளை பயன்படுத்தாமல் "டுவிட்' செய்வோருக்கு மாதம்தோறும் பணப் பரிசு அளிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டு ரசிகர்களை முட்டாளாக்கியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆற்று மணல் கடத்தல்: இருவா் கைது, பைக்குகள் பறிமுதல்

காட்பாடியில் தேங்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதி!

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பெண்ணின் உடல் தானமாக அளிப்பு

போளுவாம்பட்டி வனச் சரகா் மாரடைப்பால் உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



