சனி கிரகத்தில் மழை பெய்வதற்கு, அதைச் சுற்றியுள்ள வளையம் போன்ற பகுதிதான் காரணம் என்று வானியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதை அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அவர்களின் கண்டுபிடிப்புகளை ஆய்வு செய்து லண்டனில் உள்ள லெய்ஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
விஞ்ஞானிகள் கூறியுள்ளதாவது:÷சனி கிரகத்தை சுற்றியுள்ள வளையத்தில் இருக்கும் மின்னூட்டப்பட்ட தண்ணீர் மூலக்கூறு அணுக்கள், அக்கிரகத்தின் வளி மண்டலத்தில் மழையாக பெய்கிறது. இந்த மழைப் பொழிவு அக்கிரகத்தின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகிறது.
மழைப் பொழிவு காரணமாக சனிக் கிரகத்தின் மேல் பகுதி வெப்ப நிலையில் மாற்றம் ஏற்படுகிறது. இதன் மூலம், அந்தக் கிரகத்தின் வளையம் போன்ற பகுதிக்கும், அக்கிரகத்தின் வளி மண்டலத்துக்கும் இடையே தொடர்புள்ளதைக் கண்டறிந்துள்ளோம்'' என்றனர்.
சூரிய மண்டலத்தில் இரண்டாவது பெரிய கிரகமான சனியை சுற்றி அபூர்வமான வளையம் காணப்படுகிறது. இந்த வளையம் முழுவதும் பனித் துகள்களும், சிறு கற்களும், வாயுக்களும் நிரம்பியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜூன் 15: தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!

தமாகாவில் இருந்து யுவராஜா விலகல்

குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



