பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க 2000-க்கும் மேற்பட்டோருக்கு அழைப்பு விடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனினும், ஆர்ஜெண்டினா அதிபருக்கு அழைப்பு அனுப்புவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.
மார்கரெட் தாட்சர் கடந்த திங்கள்கிழமை காலமானார். லண்டனில் உள்ள செயின்ட் பால் கதீட்ரல் தேவாலயத்தில் புதன்கிழமை (ஏப்ரல் 17) இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க உலகம் முழுவதுமிருந்து 2000-க்கும் மேற்பட்டோருக்கு அழைப்பு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பிரதமர் டேவிட் கேமரூன் அலுவலகத்துடன் இணைந்து மார்கரெட் தாட்சர் குடும்பத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் குடும்பத்தின் பிரதிநிதி உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னாள், இந்நாள் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
அமெரிக்க முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், ஐரோப்பிய ஆணையத் தலைவர் ஜோஸ் மேனுவல் பாரோசோ உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். பிரிட்டன் ராணியும், இளவரசரும் தாட்சரின் இறுதிச் சடங்கில் பங்கேற்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முன்னாள் எம்எல்ஏ அ. சின்னசாமி மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

தங்கம் விலை அதிரடி உயர்வு! வெள்ளி?

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!

வில்லிவாக்கம் ஏரி புனரமைப்புப் பணிகள் நிறைவடைவது எப்போது?
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


