தாய்லாந்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 6 வீரர்கள் காயமடைந்தனர்.
இத்தாக்குதல் தாய்லாந்தின் தெற்குப் பகுதியில் உள்ள பட்டனி மாகாணத்தில் உள்ள 8 மாவட்டங்களில் புதன்கிழமை மாலை நடந்தது.
அரசு அலுவலகங்கள், செல்போன் கோபுரங்கள், அங்காடிகள் உள்ளிட்ட 32 இடங்களைக் குறி வைத்து தீவிரவாதிகள் இத்தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர்.
முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வரும் தாய்லாந்தின் தெற்குப் பகுதியில் கடந்த 9 ஆண்டுகளாக இதுபோன்ற நடந்து வரும் தீவிரவாதத் தாக்குதலால் சுமார் 5 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். தீவிரவாதிகளுடன் தாய்லாந்து அரசு கடந்த மார்ச் மாதம் ஒருநாள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது.
இந்தப் பேச்சு வார்த்தை மலேசியாவில் நடந்தது. பேச்சுவார்த்தையின் முடிவில், பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்ததாகவும், அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வரும் 29-ம் தேதி நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கனா கண்டேனடி தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!

அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் முறைகேடு! உச்ச நீதிமன்றத்தில் மனு!

ஆனி மாதப் பலன்கள்: 12 ராசிக்காரர்களுக்கும்! எந்தெந்த ராசிக்கு பணவரவு!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


