பயங்கரவாத எதிர்ப்பு குறித்து இந்தியா, சீனா இடையேயான ஆண்டுதோறும் நடைபெறும் பேச்சு வார்த்தை பெய்ஜிங்கில் வியாழக்கிழமை தொடங்கியது.
இரு நாள்கள் நடைபெறும் இப்பேச்சு வார்த்தையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக கூடுதல் செயலர் நவ்தேஜ் சர்ணா தலைமையிலான உறுப்பினர்கள் பங்கேற்றனர். சீனாவின் சார்பில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
2002-ம் ஆண்டிலிருந்து இந்த பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. "ஆப்கானிஸ்தானிலிருந்து அடுத்த ஆண்டு அமெரிக்க படை வெளியேறியபின் தலிபான் பயங்கரவாதிகளினால் அரசுக்கு ஏற்படும் அச்சுறுத்தல், பெருகி வரும் சைபர் (கணினி சார்ந்த) குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கை' ஆகியன குறித்து பேச்சுவார்த்தையின்போது விவாதிக்கப்பட்டன.
இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லைப் பிரச்னைகள் குறித்து வரும் வாரங்களில் ஆலோசிக்கப்பட உள்ளன. அதில் பங்கேற்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் சீனா செல்ல உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கனா கண்டேனடி தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!

அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் முறைகேடு! உச்ச நீதிமன்றத்தில் மனு!

ஆனி மாதப் பலன்கள்: 12 ராசிக்காரர்களுக்கும்! எந்தெந்த ராசிக்கு பணவரவு!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


