மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

அமெரிக்காவில் பயங்கரவாதத் தடுப்பு மையத்தைப் பார்வையிட்டார் ஷிண்டே

மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டே, அமெரிக்காவில் உள்ள தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையத்தை நேரில் பார்வையிட்டார்.

News image
Updated On :22 மே 2013, 2:46 am IST

மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டே, அமெரிக்காவில் உள்ள தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையத்தை நேரில் பார்வையிட்டார்.

இரண்டாவது இந்திய-அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டே ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா சென்றார். அவருடன் இந்திய உயர்நிலைக் குழுவும் சென்றுள்ளது.

அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேனட் நபோலிடானோவுடன் பேச்சு நடத்த உள்ள ஷிண்டே, திங்கள்கிழமை அந்நாட்டின் தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையத்தை பார்வையிட்டார். அந்த மையத்தின் இயக்குநர் மேத்யூ ஜி ஆல்சன், மையம் இயங்கும் விதம் குறித்தும் அதன் பங்களிப்பு குறித்தும் ஷிண்டேவிடம் எடுத்துக் கூறினார்.

பின்னர், ஃபேர்பாக்ஸ் கவுன்டியில் உள்ள பயங்கரவாதிகள் தடுப்புக் காவலில் வைக்கப்படும் மையத்தையும் ஷிண்டே பார்வையிட்டார். அங்கு இம்மையம் செயல்படும் முறை குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

இதனிடையே, அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ.யின் இயக்குநர் ராபர்ட் முல்லர், அந்நாட்டு அரசின் அட்டர்னி ஜெனரல் எரிக் ஹோல்டர் ஆகியோரையும் ஷிண்டே சந்தித்துப் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.