மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

கோபன்ஹேகன் மணல் சிற்பப் போட்டி: இந்தியக் கலைஞர் சுதர்சனுக்கு முதல் பரிசு

கோபன்ஹேகனில் நடைபெற்ற சர்வதேச மணல் சிற்பப் போட்டியில் இந்திய மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் முதல் பரிசை

News image
Updated On :22 மே 2013, 2:42 am IST

கோபன்ஹேகனில் நடைபெற்ற சர்வதேச மணல் சிற்பப் போட்டியில் இந்திய மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் முதல் பரிசை வென்றுள்ளார்.

டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் ஆண்டுதோறும் சர்வதேச மணல் சிற்பப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டியில் இந்தியா உள்பட 17 நாடுகளைச் சேர்ந்த மணல் சிற்பக் கலைஞர்கள் பங்கேற்றனர்.

இதில், ஒடிசாவைச் சேர்ந்த பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பற்றிய மணல் சிற்பத்தை  அமைத்திருந்தார்.

"கோ கிரீன், சேவ் எர்த்' (பசுமையை மேம்படுத்தி, உலகைக் காப்போம்) என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில், 15 அடி உயரம் கொண்ட சிற்பத்தை அவர் 7 தினங்களில் உருவாக்கினார். அவரது சிற்பத்துக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.