ரஷியாவில் பொது இடங்களில் புகைப்பிடிப்பதைத் தடை செய்யும் சட்டம் சனிக்கிழமை அமலுக்கு வந்தது.
பஸ், ரயில் மற்றும் விமான நிலையம், அரசு கட்டடங்கள், கல்வி நிறுவனங்கள், சுகாதார வளாகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் இனிமேல் ரஷியர்கள் புகைப்பிடிக்க முடியாது.
சிகரெட் விற்பனை மற்றும் விளம்பரத்துக்கு தடை செய்யவும் அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. பொது இடங்களில் புகைப்பிடிப்போருக்கு 1000 ரூபிள்கள் (சுமார் ரூ. 1736) அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
""ரஷியாவில் 4 கோடியே 40 லட்சம் பேருக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளது. புகைப்பிடித்தல் மற்றும் புகையிலைப் பொருள்களை பயன்படுத்துதல் ஆகியவற்றால் ஏற்படும் நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் 4 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.
குறிப்பாக இளைஞர்கள் பலர் புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். இதைத் தடுப்பதற்காகவே இந்தத் தடையை அமல்படுத்தியுள்ளோம்'' என்று பிரதமர் திமித்ரி மெத்வதேவ் கூறியுள்ளார்.
ஆனால், அரசின் இந்நடவடிக்கைக்கு புகைப்பிடிப்போர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். புகைப்பிடிப்பது தங்களின் உரிமை என்றும், அரசின் நடவடிக்கையை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விளாத்திகுளம் பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: குடும்பத்தினருக்கு அச்சுறுத்தலை ஏற்க இயலாது

ஓடையிலிருந்து முதியவா் சடலமாக மீட்பு
பைக்கிலிருந்து தவறி விழுந்ததில் காவலா் உயிரிழப்பு
பெரியகுளத்தில் 70 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



