வங்கதேச சிறையில் உள்ள 3 உல்ஃபா பிரிவினைவாத தீவிரவாதிகள் இந்தியாவிடம் சரணடைய விருப்பம் தெரிவித்துள்ளனர்.
உல்ஃபா இயக்கத்தின் பொதுச் செயலாளர் அனூப் சேத்தி, இயக்கத்தின் தலைவர்கள் லட்சுமி பிரசாத் கோஸ்வாமி, பாபுல் சர்மா ஆகியோர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
வங்கதேசத்தில் சட்டவிரோதமாக ஊடுருவியதாக அனூப் சேத்தி 1997-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அப்போது அவர் வங்கதேச அரசிடம் அரசியல் அடைக்கலம் கோரினார். எனினும் போலி பாஸ்போர்ட்டுடன் வங்கதேசத்துக்கு வந்தது, பிற நாட்டு கரன்சிகளை சட்டவிரோதமாக வைத்திருந்தது உள்ளிட்டவற்றுக்காக அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சிறைத் தண்டனை முடிந்த பின்னர், அடைக்கலம் கோரும் அவரது கோரிக்கை தொடர்பாக முடிவெடுக்கும் வரை பாதுகாப்பாக வைக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அவர் மீண்டும் சிறை வைக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் இந்தியா - வங்கதேசம் இடையே கைதிகளை பரிமாறிக் கொள்ளும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில் அனூப் சேத்தி உள்ளிட்ட மூவரும் இந்தியாவிடம் சரணடைய விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வங்கதேச நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இவர்கள் மூவரும் வங்கதேசத்தில் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்
ளனர்.
உல்ஃபா (அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி) இயக்கம் அசாமில் பிரிவினையை வலியுறுத்தி தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
வங்கதேச நீதிமன்றம் இந்த மூவரின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டால் அவர்கள் அடுத்த மாதம் இந்தியா திரும்ப வாய்ப்பு உள்ளது. அப்படி நாடு திரும்பினால் அவர்கள் மீது குற்ற விசாரணை நடைபெறும். அனூப் சேத்தி உள்ளிட்டோர் மீது கொலை, கடத்தல் உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன என்று மத்திய வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தலைக்கு மேல் தொங்கிய கத்தி கழுத்துக்கு வந்துவிட்டது: தொகுதி மறுவரையறை குறித்து முதல்வர்!

தொகுதி மறுவரையறை! முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை!

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?

டிசிஎஸ் நாசிக் அலுவலக விவகாரம்! நான்காண்டுகளில் நடந்தது என்ன?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

