இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

நியூசிலாந்தில் நிலநடுக்கம்

நியூசிலாந்தின் தலைநகர் வெலிங்டனில் ஞாயிற்றுக்கிழமை பலமான நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

Updated On :21 ஜூலை 2013, 7:53 pm

நியூசிலாந்தின் தலைநகர் வெலிங்டனில் ஞாயிற்றுக்கிழமை பலமான நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

நிலநடுக்கத்தின் அளவு, ரிக்டர் அளவுகோலில் 6.5 அலகுகளாக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் இழப்புகள் பற்றிய விவரங்கள் உடனடியாக தெரியவரவில்லை. இங்கு நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில் மற்றொரு இடத்தில் நிலநடுக்கம் தோன்றியது. அங்கு நிலநடுக்கத்தின் அளவு, ரிக்டர் அளவுகோலில் 5.5 அலகுகளாக பதிவாகியது. பத்து மணி நேரத்துக்கு முன்பு தான் இதே பகுதியில் 5.8 வீச்சையுடைய நிலநடுக்கம் தாக்கியுள்ளது.

நியூசிலாந்தில் சமீப நாள்களில் தொடர்ந்து பன்மடங்கு நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. நியூசிலாந்தின் நியோநெட் நிலநடுக்க கண்காணிப்பு மையத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 12 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. அதில் 6.5 என்ற அளவுதான் அதிகமானது. இந்த நிலநடுக்கம் சுமார் 30 நிமிடங்கள் வரை நீடித்ததாக அந்த மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் கட்டடங்கள் அதிர்ந்ததால் பொதுமக்கள் தெருவுக்கு ஓடி வந்தனர். தீயணைப்பு நிலையங்களுக்கும், போலீஸôருக்கும் உதவி கோரி ஏராளமான தொலைபேசி அழைப்புகள் சென்றதால், ஆங்காங்கே சைரன் ஒலி கேட்டுக்கொண்டே இருந்தது. கட்டடங்களில் மின்சாரம் உடனடியாக துண்டிக்கப்பட்டது. அடுக்குமாடி வீடுகளில் வசிப்பவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.