அமெரிக்காவின் சர்ச்சைக்குரிய இணையதள உளவுத் திட்டத்துக்கு, உலக முழுவதும் 150 இடங்களில் 700 ரகசிய செர்வர்களை நிறுவியுள்ளது தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. அதில் ஒன்று இந்தியாவில் நிறுவப்பட்டிருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த உளவுத் திட்டம் அமெரிக்காவின் ரகசியங்களை அம்பலப்படுத்திய எட்வர்டு ஸ்னோடென் வாயிலாக தெரிய வந்தது.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை (என்.எஸ்.ஏ) மூலம் நடத்தப்படும் எக்ஸ்கீஸ்கோர் என்ற திட்டத்துக்கு அளிக்கப்பட்ட உபகரணங்களில், உளவு கம்ப்யூட்டர் செர்வர்கள் எங்கெங்கு நிறுவப்பட்டுள்ளன என்ற விபரங்கள் அடங்கிய வரைபடமும் அடங்கும். அந்த செர்வர்களில் ஒன்று புதுதில்லி அருகே நிறுவப்பட்டிருப்பது வரைபடத்தில் காணப்பட்டது.
இந்த விவகாரம் சர்ச்சையை எழுப்பியதும், எந்தவொரு நாட்டையும் உளவு பார்க்க இந்த செர்வரை பயன்படுத்தவில்லை.
எங்களது உளவு நிறுவனம் பன்னாட்டு உளவு அமைப்புகளின் செயல்பாடுகளை சிறப்பாக அறிந்துகொள்ளவும், பயங்கரவாதிகளின் இலக்குகளை அறிந்துகொள்ளவும் இந்த உபகரணத்தை பயன்படுத்தியதாக அமெரிக்கா விளக்கம் அளித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அடுத்த 3 மணி நேரத்திற்கு எந்தெந்த மாவட்டங்களில் மழை?
முதல்வர் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மாநாடு!

எந்த கோயிலில் என்ன விசேஷம்?

தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு கர்நாடக அரசு பணிந்து விடாது: முன்னாள் அமைச்சர் துரைமுருகன்
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK


