அமி பேரா 2 நாடாளுமன்றக் குழுக்களுக்கு நியமனம்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க எம்.பி. அமி பேரா, அந்நாட்டின் இரண்டு முக்கிய நாடாளுமன்றக் குழுக்களின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.


இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க எம்.பி. அமி பேரா, அந்நாட்டின் இரண்டு முக்கிய நாடாளுமன்றக் குழுக்களின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவை எம்.பி.யாகப் பொறுப்பேற்றுள்ள அமி பேரா, முதல் தலைமுறை இந்திய அமெரிக்கர் ஆவார். அவரது தந்தை 1950ஆம் ஆண்டுகளில் குஜராத்தில் இருந்து அமெரிக்கா சென்று குடியேறினார்.
தலிப் சிங், பாபி ஜிண்டால் ஆகியோருக்குப் பிறகு அமெரிக்கப் பிரதிநிதிகள் அவை எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மூன்றாவது இந்தியர் அமி பேரா. இந்நிலையில், அவரை நாடாளுமன்றத்தின் வெளிநாட்டு விவகாரக் குழு உள்பட இரண்டு முக்கியக் குழுக்களின் உறுப்பினராக அமெரிக்க அரசு நியமித்துள்ளது. இது குறித்து அமி பேரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியது:
நாடாளுமன்றத்தின் வெளிநாட்டு விவகாரக் குழுவில் நியமிக்கப்பட்டதை எனக்குக் கிடைத்த கௌரவமாகக் கருதுகிறேன். இதேபோல், அறிவியல், விண்வெளி மற்றும் தொழில்நுட்பக் குழுவிலும் இடம்பெற்றுள்ளேன்.
இந்தப் புதிய பொறுப்பின் மூலம், கலிபோர்னியா மாகாணத்துக்கு நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்கக் கூடிய புதுமையான தொழிற்சாலைகளை ஊக்குவிக்கப் பாடுபடுவேன். கலிபோர்னியா பகுதியையும், நாட்டையும் எதிர்நோக்கியுள்ள பல்வேறு சவால்களை எதிர்கொள்வதற்காக கடுமையாக உழைக்க வேண்டிய நேரம் தொடங்கியுள்ளது.
பொதுவான பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும், நடுத்தர மக்களுக்கான பொருளாதாரத்தைக் கட்டமைக்கவும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற இரு தரப்புடனும் இணைந்து பணியாற்ற நான் ஆர்வத்துடன் இருக்கிறேன். எனது பெற்றோர் இந்தியாவில் இருந்து இங்கு 1950களில் நல்வாழ்க்கைக்கான கனவுகளுடன் குடியேறினர்.
அமெரிக்கப் பிரதிநிதிகள் அவைக்கு நான் வியாழக்கிழமை பொறுப்பேற்றபோது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் என் தந்தையும் ஒருவர். எனது குடும்பத்தின் கதை என்பது அமெரிக்கக் கனவின் கதையாகும் என்று அமி பேரா தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...