இந்தியா-இலங்கை இடையே நீண்டகாலமாக நிலுவையில் இருக்கும் விரிவான பொருளாதார உடன்படிக்கையையில் இலங்கை ஒரு போதும் கையெழுத்திடாது என அந்நாட்டு பிரதமர் ரணீல் விக்கிரமசிங்க கூறினார்.
இலங்கையின் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது இதை தெரிவித்த விக்கிரமசிங்க இலங்கையின் நலன்களை பாதுகாக்கும் புதிய ஒப்பந்ததம் இந்தியாவுடன் நிறைவேற்றப்படும் என்றார்.
இந்தியா-இலங்கை இடையே நீண்டகாலமாக நிலுவையில் இருக்கும் விரிவான பொருளாதார உடன்படிக்கையை வேறு பெயரில் நிறைவேற்ற இலங்கை முயல்வதாக அந்நாட்டைச் சேர்ந்த அரசு மருத்துவர்கள் சங்கம் கூறியிருந்தது.
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் ரணீல் விக்கிரமசிங்க, தனது தலைமையிலான அரசு இந்தியாவுடான ஒப்பந்தத்தில் ஒருபோதும் கையெழுத்திடாது. ஆதாரமற்ற அறிக்கைகள் மூலம் மக்களை குழப்ப வேண்டாம் என அரசு மருத்துவர்கள் சங்கத்தை கண்டித்தார்.
விரிவான பொருளாதார உடன்படிக்கையில் கடந்த ராஜபக்ச அரசு கொண்டுவந்த சில உட்பிரிவுகள் ஏற்றுகொள்ள முடியாதவை. இலங்கை நலனுக்கு எதிரான அந்த உடன்படிக்கை முற்றிலுமாக கைவிடப்படுகிறது. அதற்குப் பதில், இலங்கைக்கு சாதகமான பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியாவுடன் நிறைவேற்றப்படும்.
ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் புதிய ஒப்பந்தம் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலை பெறுவர் என்றார் விக்கிரமசிங்க.
இதனிடையே புதிய ஒப்பந்தம் குறித்து தொழிற் சங்கங்கள், அரசியல் அமைப்புகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தும் என வெளியுறவுத் துறை அமைச்சர் மாலிக் சமரவிக்ரம கூறினார். அதன்பின்னர் அமைச்சரவையின் ஒப்புதல் பெற்று ஒப்பந்தம் நிறைவேற்றப்படும்.
வருகிற 21 ஆம் தேதி புது தில்லி செல்லும் இலங்கை அதிகாரிகள் புதிய ஒப்பந்தம் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆம்பூரில் அமைதியாக முடிந்த வாக்குப் பதிவு

பெட்ரோலியப் பொருள்கள் தடையற்ற விநியோகம்: இந்தியன் ஆயில் உறுதி

மாவட்டம் வாரியாக வாக்குப் பதிவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைதியாக முடிந்த வாக்குப்பதிவு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


