தண்ணீரில் ஓடும் புதிய மோட்டார் பைக்: பிரேசில் நாட்டில் கண்டுபிடிப்பு
ஒரு லிட்டர் தண்ணீரில் 500 கிலோமீட்டர் ஓடும் மோட்டார் பைக் : பிரேசில்காரரின் புதிய கண்டுபிடிப்பு


ஒரு லிட்டர் தண்ணீரில் 500 கிலோமீட்டர் ஓடும் மோட்டார் பைக் : பிரேசில்காரரின் புதிய கண்டுபிடிப்பு
பிரேசில் நாட்டின் சாவ் பாலோ நகரை சேந்ர்த ரிக்கேர்டோ ஆஸேவெடோ என்பவர் தண்ணீரில் ஓடும் பைக்கை கண்டுபிடித்துள்ளார். அவர் கண்டுபிடித்துள்ள இந்த புதிய மோட்டார் பைக்
ஒரு லிட்டர் தண்ணீரில் சுமார் 500 கிலோமீட்டர் தூரத்துக்கு தங்குதடையின்றி ஓடக் கூடிய ஆற்றல் பெற்றுள்ளது. டி பவர் ஹெச்20 என பெயரிட்டுள்ள இந்த புதிய மோட்டார் பைக் சாதாரண தண்னீரில் ஓடுவதோடு, பெட்ரோல், டீசலில் ஓடும் வாகனங்களைப்போல் நச்சுத்தன்மை கொண்ட கார்பன் மோனாக்சைடு போன்ற வேதிப் பொருட்களை வெளியேற்றுவதில்லை. மாறாக வெறும் நீராவியை மட்டுமே வெளியேற்றுகின்றது, என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கூறும் ரிக்கேர்டோ இந்த மோட்டார் சைக்கிளில் அமைக்கப்பட்டுள்ள பெரிய அளவிலான பேட்டரியில் இருந்து கொள்கலத்தில் ஊற்றப்பட்ட தண்ணீரில் பாய்ச்சப்படும் மின்சாரமானது, அந்த தண்ணீரில் உள்ள மூலக்கூறுகளில் பொதிந்திருக்கும் ஹைட்ரஜன் எனப்படும் நீரியத்தின் ஆற்றலை வெளிப்படுத்துகின்றது.
இதன்வாயிலாக கிடைக்கும் உந்துசக்தி மூலம் காற்றை கிழித்துக் கொண்டு பறக்கும் இந்த மோட்டார் பைக், ஒரு லிட்டர் தண்ணீரில் சுமார் 500 கிலோமீட்டர் வரை செல்லும் என்று கூறியுள்ளார்.
</p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...