சுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

ஆஸி. பிரதமர் பதவியிலிருந்து அப்போட் திடீர் நீக்கம்: மால்கம் டர்ன்புல் புதிய பிரதமர் ஆகிறார்

இதையடுத்து, பிரதமர் பதவியை டோனி அப்போட் ராஜினாமா செய்வார் எனவும், புதிய பிரதமராக மால்கம் டர்ன்புல் பதவியேற்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On :

ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்போட், திங்கள்கிழமை பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
 அவரது தலைமையை எதிர்த்து வாக்கெடுப்பு கோரிய மால்கம் டர்ன்புல் 54 எம்.பி.க்களின் ஆதரவுடன் ஆளும் கூட்டணியின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 டோனி அப்போட்டுக்கு 44 எம்.பி.க்களின் வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
 இதையடுத்து, பிரதமர் பதவியை டோனி அப்போட் ராஜினாமா செய்வார் எனவும், புதிய பிரதமராக மால்கம் டர்ன்புல் பதவியேற்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
 ஆஸ்திரேலியாவுக்குத் தேவையான சிறந்த பொருளாதார நிர்வாகத்தை டோனி அப்போட் வழங்கத் தவறியதால், அவரது தலைமைக்கு சவால் விடும் நிலைக்குத் தள்ளப்பட்டாக மால்கம் டர்ன்புல் தெரிவித்தார்.
 வாக்கெடுப்புக்கு முன்னதாக தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்து மால்கம் டர்ன்புல் கூறியதாவது:
 டோனி அப்போட்டை தலைமையிலிருந்து நீக்குவதற்கான வாக்கெடுப்பைக் கோரும் முடிவை நான் அவ்வளவு எளிதில் எடுத்துவிடவில்லை.
 அதற்கு முன்னதாக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பல தரப்பினருடனும் இது குறித்து ஆழமாக விவாதித்த பின்னரே இந்த முடிவை எடுத்தேன்.
 தலைமையில் மாற்றம் வேண்டும் என்பதைத்தான் பெரும்பாலான மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.
 நாட்டுக்கு மிக மிக அவசியமான, பொருளாதாரத்தை சிறப்பாக வழிநடத்தும் தலைமையை அளிக்க டோனி அப்போட் தவறிவிட்டார்.
 இந்த அரசின் மோசமான பொருளாதார நிர்வாகத்துக்கு அமைச்சர்களைக் குறை கூற முடியாது.
 அதற்கு முழுக்க முழுக்க டோனி அப்போட்தான் காரணம் என்றார் அவர்.
 ஆளும் கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை நாட்டின் கவர்னர் ஜெனரலிடம் டோனி அப்போட் விரைவில் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 அதன் தொடர்ச்சியாக, நாட்டின் 29-ஆவது பிரதமராக மால்கம் டர்ன்புல் பதவியேற்பார்.
 கடந்த ஐந்து ஆண்டுகளில், ஆஸ்திரேலியாவின் 5-ஆவது பிரதமராக மால்கம் டர்ன்புல் பதவியேற்பது குறிப்பிடத்தக்கது.
 பிரதமர் பதவி என்பது விளையாட்டுப் பொருள் அல்ல

Story image

 "பிரதமர் பதவி என்பது பரிசுப் பொருளோ, விளையாட்டுப் பொருளோ அல்ல' என, வாக்கெடுப்புக்கு முன்னர் பிரதமர் டோனி அப்போட் கூறினார்.
 இதுகுறித்து நாடாளுமன்றத்தில் அவர் கூறியதாவது:
 விரும்பியவர்களெல்லாம் கேட்பதற்கு ஆஸ்திரேலியாவின் பிரதமர் பதவி பரிசுப் பொருளோ, விளையாட்டுப் பொருளோ அல்ல.
 நாட்டின் ஸ்திரத்தன்மையைக் குலைப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அச்சமடையச் செய்கின்றன என்றார் அவர்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.