ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

பயங்கரவாதிகள் எனக் கருதி எகிப்து ராணுவம் தாக்குதல்: 12 சுற்றுலாப் பயணிகள் பலி

எகிப்தில் பயங்கரவாதிகள் என தவறாகக் கருதி, சுற்றுலாப் பயணிகள் வந்த வாகனங்கள் மீது அந்த நாட்டு ராணுவம் நிகழ்த்திய தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்.

Published On :

எகிப்தில் பயங்கரவாதிகள் என தவறாகக் கருதி, சுற்றுலாப் பயணிகள் வந்த வாகனங்கள் மீது அந்த நாட்டு ராணுவம் நிகழ்த்திய தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்.
 மேற்குப் பாலைவனப் பகுதியைச் சேர்ந்த அல்-வாஹாத் என்னுமிடத்தில், தடை செய்யப்பட்ட பகுதிக்குள் 4 வாகனங்கள் நுழைந்தன.
 அவற்றில் வந்தவர்கள் பயங்கரவாதிகள் எனக் கருதி ராணுவத்தினர் அந்த வாகனங்கள் மீது தாக்குதல் நிகழ்த்தினர்.
 இதில் மெக்ஸிகோ, எகிப்து நாடுகளைச் சேர்ந்த 12 பேர் உயிரிழந்தனர்.
 10 பேர் காயமடைந்தனர்.
 இவர்கள் அனைவரும் சுற்றுலாப் பயணிகள் என்பது பிறகு தெரியவந்தது.
 பொதுமக்கள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்ட பகுதியில் சுற்றுலா வாகனங்கள் எவ்வாறு நுழைந்தன என்பது குறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என அந்த நாட்டு உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 எகிப்தில் மக்கள் போராட்டம் காரணமாக முன்னாள் அதிபர் முகமது மோர்ஸியின் மதவாத ஆட்சி கடந்த 2013-ஆம் ஆண்டு கலைக்கப்பட்டது.
 அப்போதிலிருந்து அந்த நாட்டில் நடைபெற்று வரும் பயங்கரவாதத் தாக்குதல்களில் ராணுவம், காவல்துறையைச் சேர்ந்த 600 வீரர்கள் உயிரிழந்தனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.