இலங்கையில் நிகழ்ந்த இறுதிக்கட்ட போர் தொடர்பான விசாரணை அறிக்கை புதன்கிழமை (செப்.16) வெளியிடப்படும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் ùஸய்த் ராத் அல்
ஹுசைன் தெரிவித்தார்.
இலங்கை இறுதிக்கட்ட போரில் மனித உரிமைகள் கடுமையாக மீறப்பட்டிருப்பது இந்த விசாரணையின்மூலம் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 30-ஆவது கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ùஸய்த் ராத் ஹுசைன் பேசியதாவது:
இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடந்த 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்தப் போரில் பல அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்ததாகவும், கடுமையான மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாகவும் கூறப்பட்டது.
இதுதொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் சார்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட்டது. பல கட்டப் போராட்டங்களைக் கடந்தே இந்த விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த விசாரணை தொடர்பான விரிவான இறுதி அறிக்கை தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை 16-ஆம் தேதி வெளியிடப்படும்.
மனித உரிமைகள் கடுமையாக மீறப்பட்டிருப்பது இந்த விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டோருக்கு உடனடியாக மறுவாழ்வு நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதை இந்த ஆணையம் மீண்டும் வலியுறுத்துகிறது.
அதேசமயத்தில், போரில் பாதிக்கப்பட்டோருக்கு மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறீசேனா எடுத்து வரும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை என்றார் அவர்.
2014-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய அமர்வின்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலேயே இந்த விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


