ஆஸ்திரேலிய வரலாற்றில் முதல் முறை: ரூ.2400 கோடி மதிப்புள்ள கோகைன் பறிமுதல்!
ஆஸ்திரேலிய வரலாற்றில்முதல்முறையாக ரூ.2400 கோடி மதிப்புள்ள கோகைன் போதைப்பொருளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ள விவகாரம் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.


சிட்னி: ஆஸ்திரேலிய வரலாற்றில்முதல்முறையாக ரூ.2400 கோடி மதிப்புள்ள கோகைன் போதைப்பொருளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ள விவகாரம் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
இது குறித்து ஆஸ்திரேலியாவில் இருந்து வெளிவரும் 9 நியூஸ் எனப்படும் தொலைக்காட்சியில் வெளியாகியுள்ள செய்தி விபரம் வருமாறு:
ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து அதிக அளவில் போதைபொருள் நடமாட்டம் இருப்பதாக எழுந்த புகார்களை அடுத்து , இந்த குற்றத்தில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க ரகசிய செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்தநடவடிக்கைகள் தொடர்ந்து வந்தது. இதன் ஒரு பகுதியாக கிறிஸ்த்துமஸ் தினமான ஞாயிற்றுக்கிழமை அன்று இரண்டு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன.
இதில் ப்ரூக்ளின் என்ற இடத்தில் 500 கிலோ கோக்கைனும், தஹிதி என்ற இடத்தில் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பத் தயாராக இருந்த 600 கிலோ கோக்கைனும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன் மொத்த மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.2400 கோடிக்கும் மேலாகும். இது தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தேசிய ரக்பி விளையாட்டு வீரர் ஒருவரும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் உதவி ஆணையர் க்றிஸ் ஷீஹன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...