ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் 2 பெண் தற்கொலைப் படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 56 பேர் பலியாகினர்.
நைஜீரியா நாட்டின் வடக்குப் பகுதியில் அமைதுள்ளது போர்னோ மாகாணம். இந்த மாகாணத்தின் தலைநகரான மாய்துகுரியிலிருந்து 90 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது திக்வா நகரம். போகோ ஹராம் முஸ்லிம் அடிப்படைவாத இயக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த முகாமில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் உணவுக்காக வரிசையில் காத்திருந்தபோது, அங்கு நுழைந்த இரு பெண் தற்கொலைப்படை தீவிரவாதிகள் திடீரென்று தாங்கள் கட்டி வந்த வெடிபொருளை வெடிக்கச் செய்தனர்.
இந்த பயங்கர தாக்குதல் சம்பவத்தில் 58 பேர் வரை கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்களாவர்.
அந்த முகாம் மீது தற்கொலைப்படைத் தாக்குதல் நடைபெற்றுள்ளதையடுத்து தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் பலத்த காயமடைந்த 78 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள நைஜீரிய நாட்டின் துணை அதிபர் யேமி ஓசின்பேஜோ கூறுகையில், தாக்குதல் ஈடுபட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றார்.
அந்த முகாம் மீது தற்கொலைப்படைத் தாக்குதல் நடைபெற்றுள்ளதையடுத்து தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் பலத்த காயமடைந்த 78 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாய் சுதர்சன் அதிரடி சதம்: பெங்களூருக்கு 206 ரன்கள் இலக்கு!

ஏப்.26-ல் சூர்யாவின் கருப்பு இசை வெளியீட்டு விழா!

பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!

ஜன நாயகன் லீக்: படத்தொகுப்பாளர் இடைநீக்கம்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


