மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

வைரச் சுரங்கங்கள் அனைத்தையும் அரசுடைமையாக்க ஜிம்பாப்வே முடிவு

ஜிம்பாப்வேயில் அனைத்து வைரச் சுரங்கங்களையும் அரசு டைமையாக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

Updated On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

ஜிம்பாப்வேயில் அனைத்து வைரச் சுரங்கங்களையும் அரசு டைமையாக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
 இதுகுறித்து ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே வியாழக்கிழமை கூறியதாவது:
 நாட்டின் வைரச் சுரங்கத் துறை மூலம் ஜிம்பாப்வே அரசுக்குப் போதிய வருவாய் கிடைக்கவில்லை.
 வைரச் சுரங்கங்களிலிருந்து எவ்வளவு வைரம் வெட்டியெடுக்கப்படுகிறது, எவ்வளவு கடத்தப்படுகிறது என்பதை அறிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது.
 எனவே, அனைத்து சுரங்கங்களையும் அரசுடைமையாக்க முடிவு செய்துள்ளோம் என்றார் அவர். ஜிம்பாப்வேயின் மரேஞ்ச் பகுதியில் வைரப் படிமங்கள் இருப்பது கடந்த 2006-ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது.
 அந்த நாட்டின் நலிந்த பொருளாதாரத்தை சீர்தூக்க இந்த வைரங்கள் பயன்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
 ஆனால் சட்டவிரோதக் குழுக்கள் அந்தப் பகுதியில் வைரம் தோண்டும் செயலில் இறங்கியதால் 2008-ஆம் ஆண்டு ராணுவம் அந்தப் பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
 இந்த நடவடிக்கையில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக மனித உரிமைகள் அமைப்புகள் தெரிவிக்கின்றன.
 மேலும், சுரங்கத் தொழிலாளர்களை கொலை செய்தல், துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு மனித உரிமைப் புகார்களால் ஜிம்பாப்வே வைர ஏற்றுமதிக்கு 2009 முதல் 2011-ஆம் ஆண்டு வரை சர்வதேசத் தடை விதிக்கப்பட்டது.
 தற்போது அந்தத் தடை விலக்கப்பட்டிருந்தாலும், நாட்டின் வைர உற்பத்தி வீழ்ச்சியடைந்து வருகிறது.
 2014-ஆம் ஆண்டு 6.6 லட்சம் கேரட்டுகளாக இருந்த ஜிம்பாப்வேயின் வைர உற்பத்தி, 2015-ஆம் ஆண்டு 4.2 லட்சம் கேரட்டுகளாகக் குறைந்தது. இந்தச் சூழலில் வைரச் சுரங்கங்களை அரசுடைமையாக்க அதிபர் முகாபே முடிவு செய்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.