அங்காரா: துருக்கியின் தியார்பகிர் மாகாணத்தில் இன்று காலை நடந்த கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 8 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
துருக்கியின் தியார்பகிர் மாகாணத்தில் உள்ளது பக்லர் மாவட்டம். இங்கு அமைந்துள்ள தீவிரவாதம் மற்றும் கலவர தடுப்பு பிரிவு காவல்துறை அலுவலகத்தின் வெளியே இன்று காலை சக்தி வாய்ந்த கார் குண்டு ஒன்று வெடித்துள்ளது. இந்த குண்டு வெடிப்பில் 8 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்
1984-ஆம் ஆண்டிலிருந்து அரசுக்கு எதிராகப் போராடி வரும் 'குர்தீஷ் தொழிலாளர் கட்சி' இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியுள்ளது என்று தெரிய வந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் கட்டிடத்தின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மற்றும் அருகாமையில் உள்ள கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து காவல்துறையினருக்கும், குர்தீஷ் தொழிலாளர் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே பெரும் கலவரம் மூண்டுள்ளது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மலைப்பாதையிலிருந்து கீழே பாய்ந்த கார்! இருவர் பலி! | Himachal

பெங்களூரில் பலத்த காற்றுடன் கனமழை! போக்குவரத்து கடும் பாதிப்பு!

என்டிடிவி-யின் 4வது காலாண்டு நிகர இழப்பு அதிகரிப்பு!

மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


