பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஹிலாரி தனது கணவருடன் வாக்குப்பதிவு!

விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடும்  ஹிலாரி கிளிண்டன் தன்னுடை கணவர் பில் கிளிண்டனுடன் வாக்களித்தார்.

News image
Updated On :8 நவம்பர் 2016, 2:20 pm

DIN

நியூயார்க்: விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடும்  ஹிலாரி கிளிண்டன் தன்னுடைய கணவர் பில் கிளிண்டனுடன் வாக்களித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இன்று நடக்கிறது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகிறார். பிரதான எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் பிரபல தொழில் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.

இதுவரை வெளியான அனைத்து கருத்து கணிப்பிலும்  ஹிலாரி கிளிண்டனே முன்னணியில் இருந்து வருகிறார். மொத்தத்தில் ஹிலாரிக்கு ஆதரவு 45.5. சதவிதமாகவும், டிரம்புக்கு 42.2 சதவிதமாகவும் உள்ளது.

தற்போது ஹிலாரி தனது கணவரம், முன்னாள் அமெரிக்க அதிபருமான ர் பில் கிளிண்டனுடன் வாக்குச்சாவடிக்கு சென்று வரிசையில் சென்று தன்னுடைய வாக்கை பதிவு செய்தார்.

அங்கிருந்த பொதுமக்களுடன் ஹிலாரி மகிழ்ச்சியுடன்பு கைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹிலாரி, 'தேர்தெடுக்கப்படும் பட்சத்தில் என்னால் முடிந்த சிறப்பான பணியை செய்வேன் என்று நம்புகின்றேன்' என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.