பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

ட்ரம்ப்பின் வெற்றிக்கு பிரெஞ்சு தூதர் போட்ட 'வில்லங்க' ட்வீட் !

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றவுடன் ' நமது கண் முன்னே உலகம் சிதைந்து வருகிறது' என்று அமெரிக்காவுக்கான பிரெஞ்சு தூதர் ட்வீட் செய்த விவகாரம் பரபரப்பை  உண்டாக்கியுள்ளது.

News image
Updated On :25 ஜனவரி 2024, 4:53 am

DIN

நியூயார்க்: அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றவுடன் ' நமது கண் முன்னே உலகம் சிதைந்து வருகிறது' என்று அமெரிக்காவுக்கான பிரெஞ்சு தூதர் ட்வீட் செய்த விவகாரம் பரபரப்பை  உண்டாக்கியுள்ளது.

செவ்வாயன்று நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின்முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் குடியரசுக் கட்சி சார்பாக போட்டியிட்ட டொனால்டு டிரம்ப், ஜனநாயக கட்சியின் ஹிலாரியை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடன் அமெரிக்காவுக்கான பிரெஞ்சு தூதர் ஜெரார்ட் அரட் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ' பிரெக்சிட்டைத் தொடர்ந்து இந்த தேர்தல்; இப்போது எல்லாமே சாத்தியம்தான்; ஒரு உலகமே நமது கண்முன்னால் சிதைகிறது. தலைசுற்றுகிறது' என்று பதிவிட்டுள்ளார்.

நீண்ட தூதரக அனுபவம் உடையவரான ஜெரார்ட், தற்போது டொனால்டு டிரம்ப் தலைமையில் அமைய உள்ள புதிய அமெரிக்க அரசுடன் இணைந்து செயல்பட வேண்டியவர். இந்நிலையில் அவரது இந்த கருத்து பரப்பரப்பைக் கிளப்பியுள்ளது.

சில நிமிடங்களில் அவரது ட்வீட் அழிக்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.