டொனால்டு டிரம்ப் பாகிஸ்தானில் பிறந்தவர்; இயற்பெயர் தாவூத் இப்ராகிம்: பாகிஸ்தான் ஊடகத்தின் 'அடடே' விளக்கம்!

தற்போது அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப் பாகிஸ்தானில் பிறந்தவர் என்றும், அவருடைய இயற்பெயர் தாவூத் இப்ராகிம் என்றும் பாகிஸ்தான் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
டொனால்டு டிரம்ப் பாகிஸ்தானில் பிறந்தவர்; இயற்பெயர் தாவூத் இப்ராகிம்: பாகிஸ்தான் ஊடகத்தின் 'அடடே' விளக்கம்!

இஸ்லாமாபாத்: தற்போது அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப் பாகிஸ்தானில் பிறந்தவர் என்றும், அவருடைய இயற்பெயர் தாவூத் இப்ராகிம் என்றும் பாகிஸ்தான் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

குடியரசு கட்சி சார்பாகப் போட்டியிட்டு வென்ற டொனால்டு டிரம்ப் வருகிற ஜனவரி மாதம் அடுத்த அதிபராக பதவியேற்க உள்ளார். டிரம்ப் வெற்றிப் பெற்றதும் , பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் ”டிரம்புக்கு பாகிஸ்தான் சார்பாகவும், என் சார்பாகவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். டிரம்பின் வெற்றி உண்மையிலேயே அமெரிக்க மக்களின் வெற்றியாகும்,” என்று பாராட்டினார். அதேபோல் பாகிஸ்தான் வெளியுறவுத்துறையும் டிரம்பை வெகுவாக பாராட்டியது.

இந்நிலையில் பாகிஸ்தானின் இருந்து நடத்தபப்டும் ‘நியோ நியூஸ்’ என்ற செய்தி தொலைக்காட்சி ஒன்று டொனால்டு டிரம்ப் பாகிஸ்தானில் பிறந்தவர்; அவருடைய இயற்பெயர் தாவூத் இப்ராகிம் என்று சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

அந்த நிறுவனத்தின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

டிரம்ப் 1954-ம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள வசிரிஸ்தானில் பிறந்தார். அவரது இயற்பெயர் தாவூத் இப்ராகிம் கான். இவரது பெற்றோர் விபத்தில் மரணம் அடைந்து விட்டனர். அதைத் தொடர்ந்து இங்கிலாந்து வாழ் இந்திய ராணுவ தளபதி ஒருவர் அவரை லண்டனுக்கு அழைத்து சென்றார். அங்கு அமெரிக்காவை சேர்ந்த டிரம்ப் குடும்பத்தினர் அந்த குழந்தையை தத்தெடுத்து வளர்த்தனர். அதை தொடர்ந்து அவர் டொனால்டு டிரம்ப் ஆனார் என இஷ்டத்துக்கு தகவல் வெளியிட்டுள்ளது.

இத்துடன் நிறுத்தாமல் ட்ரம்பின் குழந்தை பருவ போட்டோ ஒன்றையும் அந்நிறுவனம் வெளியிட்டது. அந்த சேனல் செய்தி தற்போது படத்துடன் சமூக வலைத்தளங்களில் பரவலாக கேலி செய்து விமர்சிக்கபப்டுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com