ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

பேஸ்புக் மெஸேஞ்சரில் இனி விளையாடலாம் ஜாலியா!

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் வழங்கும் தகவல் பரிமாற்ற சேவையான பேஸ்புக் மெஸேஞ்சரின் மூலம், இனி நாம் புதிய விளையாட்டுகளை விளையாடும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

News image
Updated On :30 நவம்பர் 2016, 9:52 am

நியூயார்க்: பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் வழங்கும் தகவல் பரிமாற்ற சேவையான பேஸ்புக் மெஸேஞ்சரின் மூலம், இனி நாம் புதிய விளையாட்டுகளை விளையாடும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக புகழ்பெற்ற தொழில்நுட்ப இனையதளமான 'டெக் க்ரஞ்சில்' வெளிவந்துள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

பேஸ்புக் மெஸேஞ்சரில் தற்போது 17 வகையான புதிய உடனடி விளையாட்டுகள்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த விளையாட்டுக்கள் அனைத்தயும் புகழ்பெற்ற பழைய நிறுவனங்கள் மற்றும் இந்த துறைக்கு புதியவர்கள் எனக் கருதப்படும் வெவ்வேறு  நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் இணைந்து தயாரித்துள்ளனர். 

இதற்காக புதிய ஐகான் ஒன்று பேஸ்புக் மெஸேஞ்சரின் புகைப்படங்கள் மற்றும் ஸ்டிக்கர் கமெண்ட்டுகள் அருகிலேயே அமைந்துள்ளது. இந்த விளையாட்டுகள் அனைத்தும் புதிய ஹெச்.டி.எம்.எல் 5 மொபைல் வெப் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் எந்த ஒரு திரையிலும் தொட்டவுடன் விரைவில் தோன்று மாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. 

சமீபத்திய ஆய்வு ஒன்றின் படி, பேஸ்புக்கில் நேரம் செலவிடுபவர்களில் 15 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் விளையாட்டுகளில் அதிக நேரம் செலவிடுகிறார்கள் என்று தெரிய வந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.