ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற விழா ஒன்றின் போது, அங்குள்ள உணவகம் ஒன்றின் சமையலறையில் கியாஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் 77 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஸ்பெயின் நாட்டின் தென்கடலோரப் பகுதியில் உள்ள மலாகா புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாகும். இதன் அருகே உள்ள வேலேஸ்-மலாகா என்ற நகரில் சனிக்கிழமையன்று உள்ளூர்விழா ஒன்று நடந்து கொண்டிருந்தது.
விழாவில் கலந்து கொண்டவர்கள் இங்குள்ள ’லா போஹேமியா’ என்ற உணவகத்தில் சாப்பிட திரண்டிருந்தனர். அப்போது, உணவகத்தின் சமையல் அறையில் உள்ள எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு திடீரென தீ பிடித்தது. இதை கண்ட உணவக ஊழியர்கள் மற்றவர்களை எச்சரிக்கை செய்தனர்.
அப்போது, பயங்கர சப்தத்துடன் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்தவிபத்தில் 77 பேர் படுகாயம் அடைந்தனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் மேலும் சிகிச்சை பெற்று வருபவர்களில் ஐந்துபேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

என் வாழ்வில் மறக்க முடியாத இடத்தில் இருப்பவர் ஆஷா போஸ்லே: இளையராஜா

ஐபிஎல் ரீவைண்ட்: அறிமுக சீசனில் சிஎஸ்கேவை வீழ்த்தி கோப்பையை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்!

ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிடுவோம்! டிரம்ப் எச்சரிக்கை!

விண்டோஸ் இயங்குதள பயன்பாட்டைக் கைவிடும் பிரான்ஸ்!
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


